கார் விபத்தில் சிக்கி சுமார் 2 ஆண்டுகள் விளையாடாமல் இருந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசைப்பட்டியலில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ரிஷப் பண்ட் சுமார் 2 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கி மிகவும் ஆபத்தான நிலைக்கு சென்றார். பின்னர் தீவிர சிகிச்சை, கடுமையான பயிற்சியைத் தொடர்ந்து மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இடம் பிடித்திருந்தார்.
முதல் இன்னிங்சில் 39 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 109 ரன்களும் சேர்த்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
அதன்படி சுமார் 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் அணியில் இடம் பிடித்து சதம் விளாசிய பண்ட் 6வது இடத்திற்கு முன்னேறி அசத்தி உள்ளார். தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் சதம் விளாசிய நிலையில் 5 இடங்கள் முன்னேறி 14வது இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவின் இளம் பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் 5வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்திய அணியின் அனுபவ ஆட்டக்காரர்களான ரோகித் ஷர்மா, விராட் கோலி தலா 5 இடங்கள் பின்தங்கி உள்ளனர். அதன்படி ரோகித் ஷர்மா 10வது இடத்திலும், விராட் கோலி 12வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
பேட்டிங், பௌலிங் என இரண்டிலும் கலக்கிய ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் ஆல் ரவுண்டர் பட்டியலில் முதல் இடத்தலும், அவரைத் தொடர்ந்து அஸ்வின் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். மற்றொரு இந்திய வீரர் அக்சர் படேல் 6வது இடத்தில் நீடிக்கிறார்.
பௌலிங்கில் வங்கதேத்தை மிரளவிட்ட அஸ்வின் 1 வது இடத்திலும், பும்ரா 2வது இடத்திலும், ரவீந்திர ஜடே டோ 6வது இடத்திலும் உள்ளனர்.