மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் உள்ள 1,130 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் CONSTABLE/FIRE பணிகளில் உள்ள 1,130 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும், இந்த பணியிடங்களுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள் : இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பின் மூலம் நாடு முழுவதும் 1,130 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 39 இடங்கள் நிரப்பப்பட உள்ளது.
கல்வித் தகுதி: இந்த பணிக்கு விண்ணப்பிக்க 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான கல்வி பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை: இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் எழுத்துத் தேர்வு, Physical standard Test (PST), Physical Efficiency Test (PET), சான்றிதழ் சரிபார்ப்பு, பணிக்காகத் தகுதித் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனைக்குப் பின்பு தேர்வு செய்யப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 30.09.2024 அன்று 18 வயதிற்கு மேல் உள்ளவராகவும், 23 வயதிற்கு கீழும் இருக்க வேண்டும். பட்டியல் பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரையும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 3 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெறத் தகுதியுடையவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 15 ஆண்டு வரை சலுகை பெறத் தகுதியுடையவராவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விபரம்: இந்தப் பணிக்குத் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 21,700 முத ரூ.69,100 வரை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்: மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ .100 ஆகும். மேலும், பட்டியலின, பழங்குடியின, மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் https://cisfrectt.cisf.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணைய தள பக்கத்தின் மூலம் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.