periayar university

Periyar University Recruitment 2024 : 

சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் பிசினஸ் இன்குபேஷன் கான்ஃபெடரேஷன் பிரிவு (Business Incubation confederation)செயல்படுகிறது. இங்கு பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் முதல் டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்களை இந்த பதிவில் தெளிவாக பார்ககலாம்.

Periyar University பணியின் விவரங்கள் :

பதவியின் பெயர் காலிப்பணியிடங்கள்
சிஇஓ 1
இன்குபேஷன் மேனேஜர் 1
இன்குபேஷன் அசோசியேட் 1
டெக்னிக்கல் உதவியாளர் 1
ஆய்வக உதவியாளர் 1
தூய்மை மற்றும் பராமரிப்பு பணியாளர் 2
மொத்தம் 7

வயது வரம்பு :

  • பெரியார் பல்கலைக்கழகத்தின் சிஇஓ பதவிக்கு அதிகபட்சமாக 55 வயது வரை இருக்கலாம்.
  • இன்குபேஷன் மேனேஜர் பதவிக்கு அதிகபட்சமாக 55 வயது வரை இருக்கலாம்.
  • இன்குபேஷன் அசோசியேட் பதவிக்கு அதிகபட்சமாக 55 வயது வரை இருக்கலாம்.
  • டெக்னிக்கல் உதவியாளர் பதவிக்கு அதிகபட்சமாக 35 வயது வரை இருக்கலாம்.
  • ஆய்வக உதவியாளர் பதவிக்கு அதிகபட்சமாக 30 வயது வரை இருக்கலாம்.
  • தூய்மை மற்றும் பராமரிப்பு பணியாளர் பதவிக்கு அதிகபட்சமாக 30 வயது வரை இருக்கலாம்.

சம்பள விவரம் :

  • சிஇஓ பதவிக்கு மாதம் ரூ.80,000 மற்றும் இன்குபேஷன் மேனேஜர் பதவிக்கு ரூ.55,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
  • இன்குபேஷன் அசோசியேட் பதவிக்கு ரூ.45,000 மாதம் சம்பளமாகவும், டெக்னிக்கல் உதவியாளர் பதவிக்கு ரூ.25,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • ஆய்வக உதவியாளர் பதவிக்கு ரூ.15,000 மாதம் சம்பளமாகவும், தூய்மை மற்றும் பராமரிப்பு பணியாளர் பதவிக்கு ரூ. 10,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.

கல்வித்தகுதி :

  • சிஇஓ பதவிக்கு ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், 3 முதல் 5 ஆண்டுகள் வரை அனுபவம் தேவை.
  • இன்குபேஷன் மேனேஜர் பதவிக்கு ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், 3 முதல் 5 ஆண்டுகள் வரை அனுபவம் தேவை.
  • இன்குபேஷன் அசோசியேட் பதவிக்கு ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், 1 முதல் 3 ஆண்டுகள் வரை அனுபவம் தேவை.
  • டெக்னிக்கல் உதவியாளர் பதவிக்கு அறிவியல்/ பொறியியல்/ தொழில்நுட்பம் அல்லது சம்மந்தப்பட்ட பிரிவுகளில் இளைங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், 1 முதல் 3 ஆண்டுகள் வரை அனுபவம் தேவை.
  • ஆய்வக உதவியாளர் பதவிக்கு அறிவியல்/ பொறியியல்/ தொழில்நுட்பம் அல்லது சம்மந்தப்பட்ட பிரிவுகளில் இளைங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், 1 முதல் 2 ஆண்டுகள் வரை அனுபவம் தேவை.
  • தூய்மை பணியாளர் பதவிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பராமரிப்பு பணியாளர் பதவிக்கு ஐடிஐ டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும், 2 வருடங்கள் வரை அனுபவம் தேவை.
  • தேர்வு செய்யப்படும் முறை :
    பெரியார் பல்கலைக்கழகத்தில் இருக்கும் இப்பணியிடங்கள் நேர்முகத் தேர்வில் அடிப்படையில் தேர்வு செய்யப்படலாம் என கருதப்படுகிறது.
  • விண்ணப்பிக்கும் முறை :
    பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் https://www.periyaruniversity.ac.in/ என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள கூகுள் படிவம் மூலம் தரவுகளை உள்ளிட்டு விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்.

    முக்கிய நாட்கள் :

    விவரம் முக்கிய நாட்கள்
    விண்ணப்பிக்க கடைசி நாள் 07.08.2024
    நேர்முகத் தேர்வு பின்னர் அறிவிக்கப்படும்

    பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு தகுந்த ஆவணங்களுடன் தகுதியானவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கவும்.

  • நன்றி samayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *