maritime sports academy | தமிழகத்தில் ரூ.44 கோடி செலவில் கடல்சார் நீர் விளையாட்டு மையம் அமைய உள்ளது.
பிரப்பன்வலசை பாக்ஜலசந்தி கடலில் ரூ.44 கோடி செலவில் கடல்சார் நீர் விளையாட்டு மையம் அமைக்கும் பணிகள் விரைவில் டெண்டர் விடப்பட்டு தொடங்க உள்ளது. இதன் மூலம் மீனவ இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு.
ராமநாதபுரம் மாவட்டம் தமிழகத்திலேயே 1076 கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்ட கடற்கரை உடைய பகுதியாகவும், தென் கடல் மன்னார் வளைகுடாவும்,வடக்கு கடல் பாக்ஜலசந்தி கடல் பகுதியும் உள்ளது.
ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன், அரியமான், பிரப்பன்வலசை ஆகிய கடல்பகுதியில் நீச்சல், படகு போட்டி, அலைச்சறுக்கு போன்ற பல்வேறு நீர் விளையாட்டுக்களுக்கு ஏற்ற இடமாக இருப்பதால் ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டு போட்டிகள் தனியார் நிறுவனங்கள் மூலம் நடைபெற்று வருகின்றன.
இந்தாண்டு பிப்ரவரி மாதம் சட்டப்பேரவையில் நடைபெற்ற பட்ஜெட் தாக்கல் செய்ததில் தமிழக அரசு சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல்சார் நீர் விளையாட்டு மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், பிரப்பன்வலசை வடக்கு கடல் பகுதியில் கடல்நீர் விளையாட்டு வல்லுனர்கள் மூலம் நீரின் ஓட்டம், காற்றின் தன்மை ஆகியவற்றை ஆய்வு செய்து 7 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி ரூ.44 கோடி செலவில் கடல்சார் நீர் விளையாட்டு மையம் விரைவில் அமைக்க உள்ளனர்.
விரைவில் டெண்டர் கொடுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது, மீனவ இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து நீர் விளையாட்டு வீரர்கள் உருவாக வாய்ப்புகள் இருப்பதாகவும், அப்பகுதி சுற்றுதளமாகவும் உருவாகும்.
Nandri news18