hotel mgt course

TAHDCO B.Sc Hospitality & Hotel Administration Admission 2024 : தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ/ மாணவிகளுக்கு ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டில் இளங்கலை அறிவியல் (B.Sc Hospitality & Hotel Administration) மூன்று வருட முழு நேர பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்புகள் (Diploma) சேர்த்து படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்கள்தான் உள்ளது.

TAHDCO B.Sc Admission 2024 : தாட்கோ மாணவர் சேர்க்கை
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு பல்வேறு துறைகளில் திறன் மேம்பாடு பயிற்சிகள் வழங்கி வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரப்படுகிறது. இந்நிலையில், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டில் இளங்கலை அறிவியல் (B.Sc Hospitality & Hotel Administration) மூன்று வருட முழு நேர பட்டப்படிப்பு மற்றும் தொடர்பான பட்டயப்படிப்புகள் (Diploma) படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி & அப்ளைடு நியூட்ரிஷன் நிறுவனத்துடன் இணைந்து இப்படிப்புகள் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. மேல் குறிப்பிட்டுள்ள இணையத்தளத்தில் புகைப்படம், மதிப்பெண்கள் சான்றிதழ்கள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழஙகுடியினர் என தெளிப்படுத்தும் வகுப்புப் பிரிவு சான்றிதழ் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்படிப்புகளுக்கு நேரடியாக விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்.
மேலும், இதுகுறித்த விவரங்களை தாட்கோவில் இணையத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம். தாட்கோவில் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு மெடிக்கல் கோடிங், AMCAT பயிற்சி, மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் தேர்வுகள் (SSC), அரசு வங்கி தேர்வு (IBPS), TOEFL/ IELTS/ GRE/ GMAT பயிற்சிகள், தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் நுழைவு பயிற்சி (CLAT), மருத்துவமனை மேனேஜ்மெண்ட் பயிற்சிகள், கேட் தேர்வுகள், ஜேஇஇ, ரோமோட்டிக்ஸ் பயிற்சி மற்றும் ஃபேஷன் டிசைனிங் படிப்பு ஆகிய படிப்புகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
 
நன்றி samayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *