மாஸாக ஹை கிளாஸ் வசதியுடன் ரெடியாகும் ‘ஸ்லீப்பர்’ வந்தே பாரத் ரயில் – வெளியான வியப்பூட்டும் காட்சிகள் 3 மாதத்தில் ‘ஸ்லீப்பர்’ வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். பெங்களூவிலுள்ள பி.இ.எம்.எல் தொழிற்சாலையில் தயாரான வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பெட்டிகளுடன் கூடிய மாதிரி ரயிலை, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் இணை அமைச்சர் சோமண்ணா நேற்று பார்வையிட்டனர். அதன் பிறகு 9.2 ஏக்கர் பரப்பில் வந்தேபாரத் ரயில் பெட்டி தயாரிக்கும் புதிய தொழிற்சாலை உள்ளிட்ட பிரிவுகளுக்கு அடிக்கல் நாட்டினர். ஆக்சிஜன் அளவு பெட்டியின் உள்ளே அதிகம் இருக்கும் வகையில் இப்பெட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களிடம் தெரிவித்தார். கொரோனா வைரஸ் போன்ற பாதிப்புகளில் இருந்து பயணிகளை பாதுகாக்கும் வகையில் நவீன தொழில் நுட்பம் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், வந்தே பாரத் ஸ்லீப்பர் பெட்டிகள் கொண்ட ரயில் தொடர்ச்சியாக பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவித்தார். வந்தே பாரத் ஸ்லீப்பர் சேவை இன்னும் மூன்று மாதத்திற்குள் பயணிகளின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்படும் என்றார்.
நன்றி Thanthi TV