ஹாஸ்பிடலில் மாணவி செய்த நெகிழ்ச்சி செயல்… வைரலான காட்சி – தேடி வந்து கிடைத்த பெரும் உதவி காஞ்சிபுரத்தை சேர்ந்த மாணவி, படிக்கும் விடியோ வைரல் ஆன நிலையில், அவருக்கு ஆட்சியர் அலுவலகத்தில் பரிசு வழங்கப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் சிங்காடிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜூ- சுமதி தம்பதி. இவர்களது மகள் திவ்யதர்ஷினி. மரியம் ஆக்சிலியும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 27ம் தேதி, அரசு தலைமை மருத்துவமனையில், சுமதியின் உறவினர் ஒருவர் மகப்பேறுக்காக தங்க வைக்கப்பட்டிருந்தார். அப்போது இரவு நேரத்தில், தாயுடன் மருத்துவமனையில் தங்கியிருந்த திவ்யதர்ஷினி, சிறிய விளக்கு வெளிச்சத்தில் பள்ளிப் பாடங்களை படித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மாணவியின் செயலை நேரில் கண்டு, பாராட்டி சென்றனர். இதுகுறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், கணெஷ் என்பவர் பள்ளி மாணவி திவ்யதர்ஷினியை, ஆட்சியர் அலுவலகம் வரவழைத்து, பரிசுகள் வழங்கினார். மேலும், மாணவி கல்விக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார். ஐபிஎஸ் ஆவது தனது கனவு என்று திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.
நன்றி Thanthi TV