2 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை வெறும் 8 மணிநேரத்தில் கொட்டித் தீர்த்துள்ளது. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்பெயினில் கடந்த செவ்வாயன்று கிழக்கு ஸ்பெயினில் 8 மணிநேரம் கொட்டித் தீர்த்த கனமழையால் மலகா முதல் வலென்சியா வரையிலான பகுதி முழுவதும் கடுமையான வெள்ளக் காடானது.
இந்த மழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு. பலரை காணவில்லை என்றும் கூறியுள்ளனர். (AP Photo)
வீதிகளில் பெருக்கெடுத்த வெள்ள நீரில் 5000க்கும் மேற்பட்ட கார்கள் அடித்துசெல்லப்பட்டு, நெடுஞ்சாலைகளில் வரிகட்டி நிற்கின்றன.
1973ம் ஆண்டுக்கு பிறகு மேற்கு ஐரோப்பிய நாட்டில் ஏற்பட்டுள்ள மிக மோசமான பேரிடராக இது கருதப்படுகிறது.
போலீசார், மீட்புக் குழுக்கள் ஹெலிகாப்டர்கள் மற்றும் ரப்பர் படகுகள் மூலம் வெள்ளத்தில் சிக்கி உள்ள மக்களை மீட்டு வருகின்றனர். ஸ்பெயினின் அவசரப் பிரிவுகளில் இருந்து 1,000க்கும் மேற்பட்ட துருப்புக்கள் பிராந்தியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன, மேலும் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து அதிக மீட்பு உபகரணங்களும் அனுப்பப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதியானது ஆரஞ்சு உட்பட ஸ்பெயினின் சிட்ரஸ் பழங்கள் உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கைக் கொண்டுள்ளது, இதன் விளைவு சிட்ரஸ் தயாரிப்புகளின் உலகளாவிய வர்த்தகத்தை பாதிக்கலாம்.
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், வலென்சியாவிற்கு அருகிலுள்ள ஒரு மீட்பு மையத்தை பார்வையிட்டார். இன்னும் மழை எச்சரிக்கை இருப்பதால் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு வலியுறுத்தினார்.
முன்னெச்சரிக்கை வழங்குவதிலும் மீட்புக் குழுக்களை நிலைநிறுத்துவதிலும் ஆளும் அரசு தாமதமாக செயல்பட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளனர்.