application

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளிடமிருந்து உதவித்தொகை பெற விண்ணபிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளிடமிருந்து உதவித்தொகை பெற விண்ணபிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் 01.10.2024 அன்று தொடங்கிய காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்பொழுது பெறப்படுகின்றன.

உதவித்தொகை பெறுவதற்கான கல்வித்தகுதிகள்,:பத்தாம் வகுப்பு (தோல்வி),பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து 30.09.2024 அன்றைய தேதியில் ஐந்தாண்டுகள் நிறைவடைந்த பின்னர் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓர் ஆண்டு நிறைவடைந்த பின்னர் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம்இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மேலும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 30.09.2024 அன்றைய நிலையில் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தை சார்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும்.

Nandri news18

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *