Suthanthiramalar
குஜராத்தில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக பெய்துவரும் கனமழை அம்மாநிலத்தின் பல பகுதிகளை வெள்ளக்காடாக மாற்றியுள்ளது. 10 மாநிலங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்திற்கு ராணுவத்திடம் உதவிபெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மத்திய அரசு ஆறு ராணுவ குழுவை அனுப்பியுள்ளது. தவிர, 14 தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் 22 மாநில பேரிடர் மீட்புப்படை குழுக்களை அனுப்பியுள்ளது. மாநில அரசு அளித்துள்ள தரவுகளின்படி, இதுவரை பொதுமக்களில் 23, 871 பேர் இடம் பெயர்ந்துள்ளனர். 1600க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். முதலில் தெற்கு குஜராத் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது, ஆனால் கன மழை தீவிரமடைந்த பிறகு மத்திய குஜராத், சௌராஷ்டிரா, கட்ச் உள்ளிட்ட பகுதிகளிலும் வெள்ளம் ஏற்படும் சூழல் உருவானது.
நன்றி BBC News Tamil