cinema

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் விடுதலை 2 படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பேசுபொருளாக மாறியுள்ளது..

வெற்றிமாறன் இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு சமூக அரசியல் பேசும் கதைக்களத்தில் உருவான  திரைப்படம் ‘விடுதலை’. இந்த படத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ மேனன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. காமெடியனாகவே சூரியை பார்த்து பழகிப்போன தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சூரியின் மறுபக்கத்தை காட்டி மிரளவைத்திருப்பார் வெற்றிமாறன்.

திரைக்கதை, படம் பேசிய அரசியல், கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த கலைஞர்கள், இளையராஜாவின் இசை என சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது விடுதலை.

விடுதலை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க தொடங்கினார் வெற்றிமாறன். படத்தில் பிரகாஷ் ராஜ் மற்றும் மஞ்சு வாரியார் இணைந்தனர்.

விஜய்சேதுபதியின் வாத்தியார் கதாபாத்திரத்துக்கும் மஞ்சுவாரியருக்கும் இடையேயான காதலை பேசும் கதைக்களத்தில் உருவாகி வருகிறது விடுதலை 2.

விடுதலை 2 படப்பிடிப்பு தொடங்கி தற்போது ஒன்றரை வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது, படத்தின் இன்னும் சில முக்கியமான காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், விடுதலை 2 குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகிவுள்ளது, வெளியான தகவலின் படி, விடுதலை 2 படத்தின் ரன் டைம் 4 மணி நேரம் வருவதால், வெற்றிமாறன் படத்தின் 3ஆம் பாகத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இணையத்தளத்தில் ரசிகர்களின் ரியாக்ஷனை பொறுத்துதான் விடுதலை படத்தின் 3 ஆம் பாகம் குறித்து வெற்றிமாறன் முடிவெடுப்பார் என்று கூறப்படுகிறது. மேலும் 3ஆம் பாகம் குறித்த அதிகாரபூர்வ தகவல் படக்குழு தரப்பில் இருந்து இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி news18
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *