laila

சென்னை: நடிகை லைலா பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கிறார். அதிலும் நடிகர் விஜய் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் “தி கோட்” திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் லைலா நடித்திருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய முதல் திரைப்பட அனுபவம் எப்படி நிகழ்ந்தது என்பது பற்றி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

நடிகை லைலா தமிழில் “கள்ளழகர்” திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் அதற்குப் பிறகு பல ஹிட் திரைப்படங்களில் நடித்து பெரிய அளவில் பிரபலம் அடைந்திருந்தார். அதில் அவருடைய கண்ணக்குழி சிரிப்பு பலருக்கும் ஃபேவரைட். 90ஸ் கதாநாயகிகளில் ரசிகர்களை கவர்ந்த நடிகைகளில் இவரும் ஒருவர். விஜயகாந்த், சரத்குமார், அஜித், சூர்யா, விக்ரம், பிரசாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களோடு லைலா நடித்திருக்கிறார்.

அதிலும் தில், தீனா, மௌனம் பேசியதே போன்ற திரைப்படங்கள் இவருடைய நடிப்புக்கு பெயர் வாங்கி கொடுத்தது. சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே 2006 ஆம் ஆண்டு ஈரான் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் முகைதீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்பை விட்டு விலகி இருந்த லைலா இப்போது வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களின் மூலம் மீண்டும் நடிப்பை தொடங்கி இருக்கிறார். அதிலும் நடிகர் விஜய் நடித்து வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் தி கோட் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் இவரும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய முதல் திரைப்பட அனுபவம் பற்றி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் லைலா பேசுகையில் முதலில் எனக்கு ஒரு வாய்ப்பு வந்தது. அப்போது விளம்பர சூட்டிங் என்று சொல்லி இருந்தார்கள்.

நான் அங்கு போனதும் என்னை வைத்து டெஸ்ட் எதுவும் பார்க்கவில்லை நடிக்க சொல்லி விட்டார்கள். நானும் சொன்ன காட்சிகளை நடித்துக் கொண்டிருந்தேன். அதற்குப் பிறகு எத்தனை நாள் கால் சீட் வேண்டும் என்றேன். அவர்கள் 35 நாட்கள் என்று சொன்னார்கள் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒரு விளம்பர சூட்டிகிற்கு இத்தனை நாட்களா? என்று அதிர்ச்சியாகி, இயக்குனர் தான் எனக்கு போன் போட்டு சூட்டிங் வர சொன்னார் அதனால் அவரிடமே ஒரு விளம்பரத்திற்கு இத்தனை நாள் வேணுமா என்று மீண்டும் கேட்டேன்.

அவங்க என்ன நீங்க விளையாடுறீங்களா? இது விளம்பர சூட்டிங் இல்ல… இது படம் உங்களுக்கு இது கூட தெரியாதா என்று கேட்டார். நான் அவரிடம் சாரி சார் எனக்கு தெரியாது இயக்குனர் சூட்டிங் என்று சொன்னதால் நான் விளம்பர சூட்டிங் என்று நினைத்து விட்டேன் என்று சொன்னேன்.

அதற்குப் பிறகு சூட்டிங் தொடங்கியதும் மூன்று வாரங்களுக்கு நான் அழுது கொண்டுதான் இருந்தேன். அதற்கு பிறகு தான் எனக்கு சரியாக நடிக்க முடிந்தது. அந்த திரைப்படம் துஷ்மன் துணியாகா தான். அந்தத் திரைப்படத்தில் எனக்கு கிடைத்த வாய்ப்பால் இப்ப வரைக்கும் நான் சினிமாவில் தொடர முடிகிறது என்று அந்த பேட்டியில் நடிகை லைலா கூறியிருக்கிறார்.

நன்றி oneindia

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *