தொழில்நுட்பத் துறையில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவர் மார்க் சக்கர்பெர்க். 40 வயதில் பேஸ்புக் மற்றும் அதன் தாய் நிறுவனமான மெட்டாவை புதிய தொழில்நுட்ப எல்லைகளை நோக்கி தொடர்ந்து வழிநடத்துகிறார். இன்று உலகின் மிகப் பெரிய தொழிலதிபராக இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு பில்கேட்ஸைவிட அதிகம். தொடர்ந்து புதுபுது உத்திகளை மேற்கொண்டு தொழில்நுட்பத் துறையில் தனக்கான இடத்தைப் பிடித்திருக்கிறார். அவ்வபோது அவர் பயன்படுத்தும் பொருட்கள் இணையத்தில் வைரலாவது உண்டு. அந்தவகையில் சமீபத்தில் மார்க் சக்கர்பெர்க் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டிருக்கிறார்.
அப்போது அவர் அணிந்திருந்த வாட்ச் அனைவரது கவனத்தையும் ஈர்த்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் அந்த வாட்ச் குறித்து கூகுளில் தேட ஆரம்பித்து இருக்கின்றனர். ‘De Bethune DB25 Starrry Varius’ என்ற வாட்ச்சைதான் அவர் அணிந்திருக்கிறார். நீல நிற டயலில் பிளாட்டினம் பெல்ட் கொண்ட அந்த வாட்ச்சின் மதிப்பு சுமார் 2,60,000 அமெரிக்க டாலர் என்று கூறப்படுகிறது. அதாவது நம் இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய். இதில் ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால் இந்த வாட்ச் விண்கற்களால் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அந்நிறுவனம் வருடத்திற்கு வெறும் ஐந்து வாட்ச்களை மட்டும்தான் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.