Suthanthiramalar
போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தின் குழு சோதனை பயணமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமி திரும்ப முடியாமல் உள்ளனர்.
இந்நிலையில், விண்வெளியில் சிக்கி உள்ள வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோரை மீட்க ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் காப்ஸ்யூலைப் பயன்படுத்தலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக பூமிக்குக் கொண்டுவருவதற்கு, ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் காப்ஸ்யூல், நிரூபிக்கப்பட்ட கமர்ஷியல் க்ரூ புரோகிராம் (சிசிபி) விண்கலத்தைப் பயன்படுத்துவதை நாசா பரிசீலித்து வருகிறது.
போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு இன்னும் சரி செய்யப்படாத நிலையில் அவர்களை வேறு விண்கலத்தில் பூமி திருப்ப நாசா முயற்சித்து வருகிறது.
நன்றி indianexpress