karthik vijay

மெய்யழகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கார்த்தி பேசிய விஷயங்கள் விஜய் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது

விஜய்யின் ரசிகர்கள் தற்போது GOAT படத்திற்காக ஆவலாக காத்துகொண்டு இருக்கின்றனர். விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான GOAT திரைப்படம் நாளை மறுநாள் திரையில் வெளியாகவுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஆனால் GOAT படத்தின் ட்ரைலர் வெளியான பிறகு ரசிகர்களின் மனநிலை அப்படியே மாறிவிட்டது. விஜய்யின் முந்தைய படமான லியோ படத்திற்கு தான் உச்சகட்ட எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தற்போது லியோ படத்தை காட்டிலும் GOAT படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகின்றது.

முன்பதிவின் மூலமே பல கோடி வசூலித்த GOAT திரைப்படம் புக்கிங் மூலம் மாஸ் காட்டி வருகின்றது. இப்படத்தின் புக்கிங் ஓபனான சில நிமிடங்களிலேயே டிக்கெட் அனைத்தும் விற்று தீர்ந்தது. அந்தளவிற்கு இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க நடிகர் கார்த்தி மீது விஜய் ரசிகர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர்.

GOAT ரிலீஸ் பரபரப்பிற்கு மத்தியில் நடிகர் கார்த்தி பேசிய விஷயம் விஜய் ரசிகர்களை சீண்டியுள்ளது. மெய்யழகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கார்த்தி, இந்த படத்துல பாட்டு வேண்டுமா, பாட்டு இல்ல.சண்டை வேண்டுமா சண்டை இல்ல, ஆனாலும் இப்படத்தை உங்களுக்கு பிடிக்கும் என்பது போல கார்த்தி பேசியிருந்தார். இதுதான் விஜய் ரசிகர்களை அப்சட்டாக்கி இருக்கின்றது.

விஜய்யின் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் தில் ராஜு, பாட்டு வேண்டுமா பாட்டு இருக்கு ,ஆக்ஷன் வேண்டுமா ஆக்ஷன் இருக்கு என பேசியிருந்தார். அது ரசிகர்கள் மத்தியில் ட்ரோல் செய்யப்பட்டது. இதையடுத்து கார்த்தி இவ்வாறு மேடையில் தில் ராஜு பேசியதை ட்ரோல் செய்யும் விதமாக பேசியிருக்கிறார் என விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் விஜய் நடித்த படத்தை பற்றி கார்த்தி பேசியிருப்பதால் விஜய்யையே கார்த்தி இவ்வாறு பேசியதை போல நினைத்து கார்த்தியின் மீது அதிருப்தியில் தளபதி ரசிகர்கள் இருக்கின்றனர். இருந்தாலும் ஒரு சில ரசிகர்கள் தான் கார்த்தி இவ்வாறு பேசியதை பெரிதாக எடுத்துக்கொள்கின்றனர். மீதமுள்ள ரசிகர்கள் GOAT படத்தின் ரிலீஸில் பரபரப்பாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி samayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *