vijay

 

விஜய்யின் நடிப்பில் ரமணாவின் இயக்கத்தில் வெளியான திருமலை திரைப்படமும், பேரரசு இயக்கத்தில் வெளியான திருப்பாச்சி திரைப்படமும் அஜித்திற்காக எழுதிய கதை என தகவல் கிடைத்துள்ளது. இதைகேள்விப்பட்ட ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை கூறி வருகின்றனர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் விஜய். தமிழ் சினிமாவின் தளபதியாக ரசிகர்கள் மனதில் நிலையான இடம் பிடித்திருக்கும் விஜய் தற்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகியிருக்கும் இப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி இப்படம் திரையில் வெளியாகவுள்ளது. இதுவரை இப்படத்திலிருந்து வெளியான பாடல்கள் கலவையான விமர்சனங்களை தான் பெற்றுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் சற்று அப்சட்டில் இருக்கின்றனர். இருப்பினும் படம் சிறப்பாக இருக்கும் என்பதே அவர்களது விருப்பமாக உள்ளது. அஜித்திற்கு மங்காத்தா என்ற பிளாக்பஸ்டர் திரைப்படத்தை கொடுத்த வெங்கட் பிரபு விஜய்க்கும் அதுபோல ஒரு ஹிட் படத்தை கொடுப்பார் என்பது தான் அனைவரது எதிர்பார்க்கவும் உள்ளது.

நன்றி samayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *