குமரியில் வள்ளுவர் சிலை நிறுவி 25 ஆம் ஆண்டு தொடங்க உள்ள நிலையில் வள்ளுவர் சிலை வெள்ளி விழா குறித்த முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரி கடலில் வள்ளுவர் சிலை நிறுவி 24 ஆம் ஆண்டு நிறைவடைந்து 25 ஆம் ஆண்டு தொடங்க உள்ள நிலையில் வள்ளுவர் சிலையின் வெள்ளி விழா குறித்த முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
கடந்த 2000ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியால் வள்ளுவர் சிலை திறக்கப்பட்டது. கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலை அமைத்து கால் நூற்றாண்டு முடிவடைந்துவிட்டது.
இந்நிலையில் வள்ளுவர் சிலையின் வெள்ளி விழா குறித்த முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். குமரி முனையில் வானுயர்ந்து நிற்கும் வள்ளுவர் சிலையின் வெள்ளி விழா வருகிற டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு அரசு சார்பில் வள்ளுவர் சிலையின் வெள்ளி விழா கொண்டாடப்படும் என்று கூறியுள்ளார். சுனாமி பேரலையின் போதும் கம்பீரமாக உயர்ந்து நின்றார் திருவள்ளுவர். இதுதொடர்பாக டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் பல்வேறு போட்டிகள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
ஜனவரி 1, 2025: குமரிமுனையில் வானுயர்ந்து நிற்கும் வள்ளுவர் சிலையின் வெள்ளி விழா!
மேலும் வள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை முன்னிட்டு டிசம்பர் 25 முதல் 30-ம் தேதி வரை மாவட்ட அளவில் திருக்குறள் தொடர்பான கருத்தரங்கம், பேச்சரங்கம் நடைபெறும் என்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
Nandri indianexpress