வசிப்பது குறைவு ஆனால் பணியில் இருப்பது அதிகம்; அமெரிக்க இந்தியர்களின் ஆதிக்கம்
வாஷிங்டன்: சமீபகாலமாக அமெரிக்காவில் இந்தியர்களின் ஆதிக்கம் கணிசமாக அதிகரித்து வருவதாக ஒரு புள்ளி விவர அறிக்கை தெரிவிக்கிறது.
சான்பிரான்ஸிஸ்கோவில் உள்ள பிரபல ‘இந்தியாஸ்போரா’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் பங்கு பல்வேறு துறைகளில் படுவேகமாக அதிகரித்து வருவதாகவும், இது மிக வியப்பான விஷயம் என்றும் தெரிவித்துள்ளது.
ஜொலிக்கும் இந்தியர்கள்
இந்தியர்கள் ஆதிகம் தொடர்பாக அந்த அமைப்பினர் நிறுவனர் எம்.ஆர். ரங்கசாமி கூறியிருப்பதாவது: அமெரிக்காவில் வாழும் மொத்த மக்கள் தொகையில் இந்தியர்கள் 1.5 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர். ஆனால் இதில் இந்தியர்கள் பல லட்சம் பேர் அமெரிக்காவின் முக்கிய துறைகளில் தங்கள் பணி வாய்பை பெற்றுள்ளனர். வர்த்தகம், கல்வி, கலாசாரம், பொதுசேவை, உணவுதுறை, மாடலிங் என பல துறைகளில் ஜொலிக்கின்றனர். 500 கம்பெனிகளில் 16 நிறுவனங்கள் அமெரிக்க பொருளாதார வளர்ச்சியில் பல கோடி ஈட்டுவதாக உள்ளது. இந்நிறுவனங்கள் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பும் கிட்டுகிறது.
அவர்களின் பங்களிப்பு மிகவும் பாராட்டுதலுக்குரியதாகவும், அமெரிக்கா சமூகத்தில் நல்ல முன்னேற்ற அடையாளமுமாகவே பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நன்றி dinamalar