மும்பை : நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி படுதோல்வியை தழுவி இந்திய அணி தொடரை முழுமையாக இழந்தது. இதற்கு முக்கிய காரணம் ரோகித் சர்மாவும் விராட் கோலியும் பேட்டிங்கில் சொதப்பியது தான்.

மூன்று டெஸ்ட் போட்டிகளில் சேர்த்து மொத்தமாக இரண்டு வீரர்களுமே நூறு ரன்களை கூட தொடவில்லை. இந்த நிலையில் தோல்விக்கு பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ள ரோகித் சர்மா தான் தவறு செய்து விட்டதாகவும் பேட்டிங் மற்றும் கேப்டன்சி ஆகியவற்றில் சரியாக செயல்படவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த், ரோகித் சர்மாவை பாராட்டிருக்கிறார். இதில், “ஆஸ்திரேலியா தொடரில் இந்தியா சரியாக விளையாடவில்லை என்றால் என்ன மாற்றங்களை செய்ய வேண்டும் என்பது குறித்து இப்போதே நாம் யோசிக்க தொடங்கி விட வேண்டும். ரோகித் சர்மா ஆஸ்திரேலியா மண்ணில் சரியாக விளையாடவில்லை என்றால் அவரே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவார். அதன் பிறகு ரோகித் சர்மா ஒரு நாள் போட்டிகளில் மட்டும்தான் விளையாடுவார் என நினைக்கின்றேன்”. “ரோகித் சர்மா ஏற்கனவே சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். ரோகித் சர்மாவுக்கு தற்போது வயதாகி விட்டது அவர் இன்னும் இளம் வீரர் கிடையாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அதே சமயம் ரோகித் சர்மாவை நாம் பாராட்ட வேண்டும். நான் சரியாக விளையாடவில்லை என்று உண்மையை அவர் ஒப்பு கொண்டிருக்கிறார்”.

“ஒரு வீரர் தான் சரியாக விளையாடவில்லை என்பதை ஒப்புக் கொண்டால் மட்டுமே மீண்டும் சிறப்பாக விளையாடுவதற்கு அது வழியை ஏற்படுத்தும். நம் மீது தவறு இருந்தால் அதை ஒப்புக் கொள்வது தான் மிகவும் முக்கியம். ஒரு நல்ல மனிதனுக்கு அது ஒரு நல்ல தகுதியாகும். தற்போது அவர் ஒப்புக்கொண்டதன் மூலம் மீண்டும் பார்மை நோக்கி செல்ல அது வழி வகுக்கும்”.

“விராட் கோலியை பற்றி தற்போது கருத்து கூறுவது சரி கிடையாது. ஏனென்றால் ஆஸ்திரேலிய மண்ணில் விராட் கோலி சிறப்பாக விளையாடுவார். விராட் கோலி பலங்களில் ஒன்று ஆஸ்திரேலியா ஆடுகளத்தில் ரன்கள் சேர்ப்பது. எனவே விராட் கோலி இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் கூட டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட முடியும்” என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். இந்தியா ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி வரும் 22ஆம் தேதி பெருத்து நாட்களில் தொடங்குகிறது குறிப்பிடத்தக்கது.Nandri 

Nandri mykhel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *