ரேஷன் கார்டுதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கிடையே திமுக ஆட்சி வந்தவுடன் புதிய ‘ஸ்மார்ட் கார்டு’கள் வழங்கும் முறையில் பெரும் மாற்றம் கொண்டு வந்தார். தமிழக முதல்வரின் உத்தரவின்படி விண்ணப்பித்த 30 நாட்களில் புதிய ஸ்மார்ட் கார்டுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.நாடாளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்த புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி அடுத்த மாதம் முதல் தொடங்குகிறது. அதற்கான ஆய்வு பணியை தமிழக அரசு தொடங்கி உள்ளது.தமிழ்நாட்டில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் பெற 2 லட்சத்து 80 ஆயிரம் விண்ணப்பம் செய்துள்ளனர். அதன்படி அடுத்த மாதம் முதல் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நன்றி News18 Tamil Post navigation தமிழக மீனவர்கள் மீண்டும் கைது: ஸ்டாலின் எழுதிய கடிதம் – நடவடிக்கை எடுக்குமா மத்திய அரசு! ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு திமுக கடும் எதிர்ப்பு – காரணம் என்ன?