Indian Railway : ரயில்வேயில் 1,376 காலிப்பணியிடங்கள்.. பல்வேறு பிரிவுகள் வேலை – யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
Indian Railway RRB Para Medical Recruitment 2024 : ரயில்வேயில் துணை மருத்துவப் பிரிவுகளில் காலியாகவுள்ள 1,376 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தெற்கு ரயில்வேயில் மட்டும் 143 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. கார்டியாக் டெக்னிஷியன், ஆய்வக உதவியாளர், மருந்தாளர், ECG டெக்னிசியன் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறைகளை இந்த பதவில் பார்க்கலாம்.
RRB Para Medical Recruitment 2024 – பணியின் விவரங்கள் :
உணவியல் நிபுணர், செவிலியர் கண்காணிப்பாளர், ஆடியோலஜிஸ்ட் & ஸ்பீச் தெரபிஸ்ட், மருத்துவ உளவியலாளர், பல் சுகாதார நிபுணர், சுகாதாரம் மற்றும் மலேரியா ஆய்வாளர், ஆய்வக கண்காணிப்பாளர், பெர்ஃப்யூஷனிஸ்ட், பிசியோதெரபிஸ்ட், தொழில்சார் சிகிச்சையாளர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், மருந்தாளுனர், ரேடியோகிராபர் எக்ஸ்-ரே டெக்னீஷியன், பேச்சு சிகிச்சையாளர், கார்டியாக் டெக்னீஷியன், ஆப்டோமெட்ரிஸ்ட், ECG டெக்னீஷியன், ஆய்வக உதவியாளர், களப்பணியாளர் ஆகிய பதவிகள் நிரப்பப்படுகிறது.
சென்னை ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவில் உள்ள காலிப்பணியிடங்கள் :
பதவியின் பெயர் | காலிப்பணியிடங்கள் |
கார்டியாக் டெக்னீஷியன் | 2 |
மருத்துவ உளவியலாளர் | 1 |
ECG டெக்னிஷியன் | 2 |
களப்பணியாளர் | 2 |
சுகாதாரம் மற்றும் மலேரியா இன்ஸ்பெக்டர் | 18 |
ஆய்வக உதவியாளர் | 17 |
பெர்ஃப்யூஷனிஸ்ட் | 2 |
மருந்தாளுனர் | 31 |
பிசியோதெரபிஸ்ட் | 3 |
ரேடியோகிராஃபர் எக்ஸ்ரே டெக்னிஷியன் | 7 |
நர்சிங் கண்காணிப்பாளர் | 58 |
மொத்தம் | 143 |
வயது வரம்பு :
- கார்டியாக் டெக்னீஷியன், மருத்துவ உளவியலாளர், ECG டெக்னிஷியன், களப்பணியாளர், சுகாதாரம் மற்றும் மலேரியா இன்ஸ்பெக்டர், பிசியோதெரபிஸ்ட் மற்றும் ஆய்வக உதவியாளர் ஆகிய பதவிகளுக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபடியாக 36 வயது வரை இருக்கலாம்.
- பெர்ஃப்யூஷனிஸ்ட் பதவிக்கு 21-43 என்ற வயது வரம்பில் இருக்க வேண்டும்.
- மருந்தாளுனர் பதவிக்கு 20-38 என்ற வயது வரம்பில் இருக்க வேண்டும்.
- ரேடியோகிராஃபர் எக்ஸ்ரே டெக்னிஷியன் 19-36 என்ற வயது வரம்பில் இருக்க வேண்டும்.
- நர்சிங் கண்காணிப்பாளர் பதவிக்கு 20-43 என்ற வயது வரம்பில் இருக்க வேண்டும்.
- வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கூடுதலாக 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 வருடங்கள் வரை வயது வரம்பில் தளர்வு உள்ளது.
சம்பள விவரம் :
ரயில்வேயில் துணை மருத்துவப் பதவிகளுக்கு நிலை 4 (ரூ.25,500 – 81, 100) முதல் நிலை 7 (ரூ.44,900 – 1,42,400) வரை சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
ரயில்வேயில் துணை மருத்துவப் பிரிவுகளில் உள்ள இப்பதவிகளுக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் இளங்கலைப் பட்டம், சான்றிதழ் படிப்பு/ டிப்ளமோ ஆகியவற்றை முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை :
இப்பதவிகளுக்கு கணினி வழி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற சென்னை ரயில்வே ஆட்சேர்ப்பு இணையத்தளத்தில் ஆன்லைன் வழியாக பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கிய நாட்கள் :
விவரம் | முக்கிய நாட்கள் |
விண்ணப்பம் தொடங்கம் நாள் | 17.08.2024 |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 16.09.2024 |
விண்ணப்பம் திருத்தம் செய்ய கால அவகாசம் | 17.09.2024 – 26.09.2024 |
ரயில்வேயில் துணை மருத்துவப் பிரிவுகளில் காலியாகவுள்ள 1,376 காலிப்பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் ஆகஸ்ட் 17ஆம் தேதியின் இருந்து ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கவும்.