சென்னை: நாடெங்கும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது யூபிஐ சர்கிள் என்ற புது வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, யூபிஐ- பயன்படுத்தி வரும் ஒருவர் தனது யூபிஐ கணக்குடன் செகண்டரி யூசராக தங்கள் குடும்ப உறுப்பினரையோ, நண்பரையோ அல்லது ஊழியரையோ இணைத்துக் கொள்ளலாம். ஒருவர் தனது யூபிஐ – ஐடியில் 5 பேர் வரை செகண்டரி யூசராக சேர்த்துக்கொள்ளலாம்.
நாடு முழுவதும் தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது அதிகரித்து விட்டது. டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது தற்போது தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. காய்கறி கடை, பெட்டிக் கடை என நாம் எங்கு சென்றாலும் தற்போது கூகுள் பே, போன் பே வழியாக யூபிஐ பயன்படுத்தியே பணம் அனுப்புகிறார்கள். கையில் ரொக்கமாக பணம் வைத்திருக்க தேவையில்லை.
சில்லறை பிரச்சினையில்லை என்பதால் பலரும் யூபிஐ மூலமாக பணபரிவர்த்தனை செய்வதையே விரும்புகிறார்கள். பெரிய மெட்ரோ நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை கூகுள் பே, போன் பே மூலமாக மக்கள் பணம் செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது யூபிஐ சர்கிள் என்ற புது வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, யூபிஐ- பயன்படுத்தி வரும் ஒருவர் தனது யூபிஐ கணக்குடன் செகண்டரி யூசராக தங்கள் குடும்ப உறுப்பினரையோ.. நணபரையோ அல்லது ஊழியரையோ இணைத்துக் கொள்ளலாம். இப்படி இரண்டாவது யூசராக இணைக்கப்படுவர்கள், முதன்மையான யூபிஐ கணக்கில் இருந்து அதாவது, பிரைமரி யூபிஐ கணக்கில் இருந்து பரிவர்த்தனைகளை செய்ய முடியும். இதற்கு யூபிஐ கணக்கு வைத்திருக்கும் நபர், எவ்வளவு தொகை பரிமாற்றம் செய்யலாம் என்பதை லிமிட் செய்து வைத்துக்கொள்ள முடியும்.
இல்லையென்றால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் யூபிஐ கணக்கு வைத்திருப்பவர் ஒப்புதல் கொடுத்த பிறகே பரிவர்த்தனை செய்யும்படியாக வைத்துக்கொள்ள முடியும். யூபிஐயில் கொண்டு வரப்பட்டு இருக்கும் இந்த புதிய வசதி, யூபிஐ கணக்கு இல்லாதவர்கள், டிஜிட்டல் பரிவர்த்தனை செய்ய அச்சப்படுபவர்கள், நிறுவனங்களின் கணக்கை அலுவலக பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு பெரும் வசதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோசடிகளை தடுக்கும் விதமாக பல்வேறு பாதுகாப்பு அம்சங்களும் இதில் உள்ளன. தனது யூபிஐ கணக்குடன் ஒருவரை இணைக்கும் போதே பிரைமரி யூசர், எவ்வளவு தொகைவரை எடுக்க முடியும் என்பதை செட் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் அப்ரூவல் கேக்கும். அதிகபட்சமாக ஒரு மாதத்திற்கு 15 ஆயிரமும், ஒரு பரிவர்த்தனையின் போது 5 ஆயிரமும் என்ற வரம்பை என்பிசிஐ விதித்துள்ளது. யூபிஐ செயலி வாயிலாகவே தனது கணக்கில் இணைக்கப்பட்டு இருக்கும் செக்கன்டரி யூசரின் பரிவர்த்தனைகளை பிரைமரி யூசர் கண்காணிக்க முடியும். 15 ஆயிரத்திற்கு மிகாமல் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் அதிகபட்ச வரையறையாக பிரைமரி யூசர் செட் செய்து கொள்ளலாம். ஒருவர் தனது யூபிஐ – ஐடியில் 5 பேர் வரை செகண்டரி யூசராக சேர்த்துக்கொள்ளலாம். அதேவேளையில், செகண்டரி யூசராக ஒரு ஐடிக்கு மேல் இன்னொரு ஐடியில் சேர முடியாது. பிரைமரி யூசர் எந்த நேரத்திலும் செக்கண்டரி யூசரை தனது யூபிஐ -யில் இருந்து நீக்கி கொள்ள முடியும்.
நன்றி oneindia