இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே டர்பனில் வெள்ளிக்கிழமை நடைபற்ற முதல் டி20 போட்டியில், இந்திய அணி 61 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா சென்று 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.  இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே முதல் டி20 ஆட்டம் டர்பனில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்திய அணியில் தொடக்கா ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா களமிறங்கினர். 

இந்திய அணி 3.1 ஓவர்களில் 24 ரன்கள் எடுத்திருந்தபோது அபிஷேக் ஷர்மா 7 ரன்கள் மட்டும் எடுத்து ஜெரால்டு கோட்ஸீபந்தில் ஏய்டன் மர்க்ரம்மிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்ய வந்தார். 

மற்றொரு தொடக்க சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி சிக்சர், ஃபோர் என அடித்து வானவேடிக்கை நிகழ்த்தினார். சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 7 ஃபோர், 10 சிக்சர் உள்பட 107 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்திய அணியில், சூர்ய குமார் யாதவ் 21, திலக் வர்மா 33, ஹர்திக் பாண்டியா 2, ரிங்கு சிங் 11, அக்சர் படேல் 7, ரவி பிஷ்னோய் 1 ரன் எடுத்து அவுட் ஆனார்கள். அர்ஷ்தீப் சிங் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில், ஜெரால்ட் கோட்ஸீ 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

தென் ஆப்பிரிக்கா  அபார சதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாம்சன் 10 சிக்சர்களுடன் 107 ரன்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்க தரப்பில் அதிகபட்சமாக ஜெரால்ட் கோட்சி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மேக்ரோ ஜான்சென், கேஷவ் மஹராஜ், பீட்டர், பேட்ரிங் க்ருகெர் ஆகியோ தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. இந்திய அணியின் அபார பந்துவீச்சை சமாளிக முடியாமல் தென் ஆப்பிரிக்க அணி திணறியது. அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்த ஏய்டன் மர்க்ரம் அதே ஓவரில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ஸ்டப்ஸ் 11 ரன்களில் ஆவேஷ் கானின் பந்தில் அவுட் ஆனார். 

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன ரிக்கெல்டான் அதிரடியாக விளையாடிய நிலையில், வருண் சக்ரவர்த்தியின் அவுட் ஆனார். இதன்பின் ஜோடி சேர்ந்த கிளாசென் – மில்லர் இணை படிப்படியாக அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டது. 42 ரன்கள் பார்ட்னர் அமைத்த இந்த ஜோடியை வருண் சக்ரவர்த்தி சிறப்பாக பந்துவீசி அவுட் ஆக்கினார். கிளாசென் 25 ரன்களிலும், மில்லர் 18 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

தென் ஆப்பிரிக்க வீர்ர் பேட்ரிக் க்ரூகர் மற்றும் சிமெலேன் இருவரையும் ரவி பிஷ்னோய் ஒரே ஓவரில் அவுட் ஆகி வெளியேற்றினார். ஆனால், ஜெரால்டு கோட்ஸீ அதிரடியாக விளையாடி தென் ஆப்பிரிக்க அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஆனாலும் தென் ஆப்பிரிக்கா அணி 17.5 ஓவர்க அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்களில் ஆல் அவுட் ஆனது. 

இதன் மூலம், இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக கிளாசென் 25 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் வருண் சக்ரவர்த்தி மற்றும் ரவி பிஷ்னோய் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

Nandri indianexpress

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *