itel

ஐடெல் நிறுவனம் இந்திய சந்தையில் A50 மற்றும் A50C என இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது. இவற்றில் ஐடெல் A50 மற்றும் A50C மாடல்களில் 6.6 இன்ச் HD+ IPS டிஸ்ப்ளே, யுனிசாக் டி603 ஆக்டா கோர் பிராசஸர், 8MP ஏஐ டூயல் கேமரா சென்சார்கள், 5MP செல்பி கேமரா, 3 ஜிபி, 4ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஐடெல் A50C மாடலில் மட்டும் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் மாற்றப்பட்டு இருக்கிறது. இதில் 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. ஐடெல் A50 மாடலில் 5000 எம்ஏஹெச் பேட்டரி உள்ளது. இவற்றுடன் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.

இரு மாடல்களிலும் ஆண்ட்ராய்டு 14 கோ எடிஷன் ஓஎஸ் உள்ளது. கனெக்டிவிட்டிக்கு 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களுக்கும் இலவசமாக ஸ்கிரீனை மாற்றிக் கொள்ளும் வசதி மற்றும் ஒரு வருட வாரண்டி வழங்கப்படுகிறது.

ஐடெல் A50C ஸ்மார்ட்போன் பிளாக், புளூ, கோல்டன் மற்றும் கிரீன் என நான்குவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 5 ஆயிரத்து 599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐடெல் A50 ஸ்மார்ட்போன் பிளாக், புளூ, கோல்டன் மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 6,499 ஆகும். இரு மாடல்களின் விற்பனை அமேசான் தளத்தில் நடைபெற உள்ளது.

நன்றி maalaimalar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *