மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நவம்பர் 20-ம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும் ஜார்க்கண்டில் நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நவம்பர் 20-ம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும் ஜார்க்கண்டில் நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நவம்பர் 23-ம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டமன்ற பதவிக்காலம் வரும் நவம்பர் 26-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதேபோல், 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தின் சட்டமன்ற பதவிக்காலமும் அடுத்த ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. 

மகாராஷ்டிரா சட்டசபைக்கு நவம்பர் 20-ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. ஜார்க்கண்ட் தேர்தல் நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இரண்டு மாநில தேர்தல் முடிவுகளும் நவம்பர் 23-ம் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் 26-ம் தேதியுடன் முடிவடைகிறது, அதற்கு முன் தேர்தல் பணிகள் முடிக்கப்பட வேண்டும்.

குறிப்பாக, வயநாடு மற்றும் அமேதி ஆகிய தொகுதிகளில் வெற்றிபெற்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் அறிவித்தது. 

தற்போது, மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மற்றொருபுறம், ஜார்கண்ட் மாநிலத்தில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜார்கண்ட் முக்தி மோர்சா கட்சி ஆட்சியில் உள்ளது. 

தேர்தலையொட்டி, கடந்த வாரம் மகாராஷ்டிரா அமைச்சரவை கூட்டத்தின் போது பொருளாதாரத்தில் பின்தங்கிய ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கான ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ. 8 லட்சத்தில் இருந்து ரூ. 15 லட்சமாக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டது. இதேபோல், மும்பையில் நுழையும் இலகுரக மோட்டார் வாகனங்களுக்கான சுங்கவரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் அம்மாநில அரசு அறிவித்தது.

அண்மையில், நடந்து முடிந்த ஹரியானா சட்டமன்ற தேர்தலில் பாஜகவும், ஜம்மு & காஷ்மீர் தேர்தலில் இந்தியா கூட்டணியும் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

நன்றி indianexpress

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *