தமிழக அரசு மகளிருக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மகளிர் உரிமைத்தொகை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்த திட்டங்கள் கர்ப்பிணித் தாய்மார்கள், பெண் குழந்தைகள் மற்றும் நலிவுற்ற பெண்களுக்கு நிதி உதவி, கல்வி உதவி மற்றும் சுய வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகளை வழங்குகின்றன.
மகளிர்களுக்கான தமிழக அரசின் திட்டங்கள்
தமிழக அரசு சார்பாக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது மகளிர் உரிமைத்தொகை திட்டமாகும். அந்த வகையில் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் 50ஆயிரம் உதவித்தொகை திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த 50ஆயிரம் ரூபாய் பெண் குழந்தைகளின் பெயரில் வங்கியில் வைப்பு வைக்கப்படுகிறது.
இந்த திட்டத்தால் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கும், சேமிப்பிற்கும் சிறந்த பயனாக உள்ளது. மேலும் அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உயர் கல்வியில் இணையும் போது மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் மகளிர் முன்னேற்றத்திற்காக 50ஆயிரம் மானியம் வழங்குவதற்கான திட்டத்தையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி
கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், கைம்பெண்கள் மற்றும் பேரிளம் பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படவுள்ளது. 200 பயனாளிகளுக்கு சுய தொழில் செய்வதற்கு 50 ஆயிரம் ரூபாய் வீதம் சுய தொழில் செய்து சுயமரியாதையுடன் வாழ்வதற்கு 1 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படுவதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வரும் நிலையில்,
சுகாதாரத்துறை துறை சார்பாக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டமானது பல ஆண்டு காலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் கர்ப்பம் அடைந்த பெண்களுக்கு உதவித்தொகையாக 18ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அந்த வகையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நிதி உதவி திட்டத்தில் ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தில் பேறுகால நிதி உதவி தேவையாக 12000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
18ஆயிரம் ரூபாய் உதவித்தொகை
இந்தத் திட்டத்தில் மூலம் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பதற்கு இந்த நிதியானது உதவியாக உள்ளது. குறிப்பாக ஊட்டச்சத்து உணவுகள் வாங்குவதற்கும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஐந்து தவணை முறைகளில் 18,000 ரூபாயானது வழங்கப்படுகிறது. மேலும் 2000 ரூபாய் மதிப்பிலான ஊட்டச்சத்து பரிசு பெட்டகமும் பெண்களுக்கு வழங்கப்படுகிறது.
நிதி உதவி பெற விதிமுறைகள்
கர்ப்பமுற்ற பெண்கள் 12 வாரத்திற்குள் கிராம சுகாதார செவிலியரிடம் பதிவு செய்து பிக்மி எண் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண் பெற்றவுடன் 2000 ரூபாய் வங்கியில் வரவு வைக்கப்படும். இதனையடுத்து ஊட்டச்சத்து பரிசு பெட்டகமும் மூன்றாம் மாதம் நிலையில் 2000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இரண்டாவது தவணையாக நான்காம் மாதம் நிறைவடைவதற்கும் கர்ப்ப கால மற்றும் ரத்த பரிசோதனை அரசு மருத்துவமனையில் ஆரம்ப சுகாத நிலையில் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அப்போதும் 2000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போதும் இரண்டாம் கட்ட ஊட்டச்சத்தை பரிசு பெற்ற வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவதாக அரசு மருத்துவமனைகளில் பிரசவம் நிகழ்ந்த உடன் நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும், நான்காவது் தவணையாக குழந்தைகளுக்கு மூன்றாம் தவணை தடுப்பூசி போட்ட பிறகு 4000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது குழந்தைகளுக்கு 9 மாதம் அதாவது 270 நாட்கள் தடுப்பூசி போட்ட பிறகு 2000 ரூபாய் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது .மொத்தமாக 18 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது மட்டும் இல்லாமல் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து மாவு, இரும்பு சத்து டானிக், பேரிச்சம்பழம், புரத சத்து பிஸ்கட், ஆவின் நெய், பூச்சி மாத்திரை, துண்டு ஆகியவைகளை கொண்ட 2 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பரிசு பெட்டகம் வழங்கப்படும்.
திட்டத்தின் பயண் பெறுவதற்கான தகுதிகள்
கர்ப்பிணித் தாய்மார்கள் 19 வயதை பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். இந்த உதவித்தொகையானது இரண்டு பிரசவத்திற்கு மட்டுமே பெற முடியும்.
இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெரும் தாய்மார்கள் முதல் மற்றும் ஐந்தாம் தவணை நிதியை மட்டும் பெற்றுக் கொள்ளலாம்.
திட்டத்தின் பயண் பெறுவதற்கான நடைமுறைகள்
கர்ப்பிணித் தாய்மார்கள் கர்ப்பம் அடைந்தவுடன் 12 வாரத்திற்கு கிராமம் மற்றும் நகர சுகாதார செவிலியர் இடம் பதிவு செய்து எண் பெற்றிருக்க வேண்டும் அல்லது 12 வாரத்துக்குள் முன்பதிவு செய்து இருக்க வேண்டும். ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு மட்டுமே இந்த திட்டமானது செயல்படுத்தப்படும் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நன்றி asianetnews