பாரிஸ்: 2024 விளையாட்டுத் தொடர் நேற்று (செப்டம்பர் 8) உடன் முடிவுக்கு வந்தது. வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிக அதிக அளவிலான பதக்கங்களை வென்று உள்ளது இந்தியா. கடந்த 2021 டோக்கியோ பாராலிம்பிக் தொடரில் இந்தியா 19 பதக்கங்களை வென்ற நிலையில் இந்த முறை 29 பதக்கங்களை வென்று இருக்கிறது. மேலும், பதக்கப் பட்டியலில் இந்தியா 18-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. பாராலிம்பிக் பதக்கப் பட்டியலில் இதுவே இந்தியாவின் சிறந்த இடமாகும்.
ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது சீனா 220 பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. கிரேட் பிரிட்டன் 124 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், அமெரிக்கா 15 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்தியா இந்த பாராலிம்பிக் தொடரில் 7 தங்கப் பதக்கம், 9 வெள்ளிப் பதக்கம் மற்றும் 13 வெண்கலப் பதக்கங்களை வென்று இருக்கிறது.
இந்த முறை இந்தியாவுக்கு பாரா வில்வித்தையில் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலம் என இரண்டு பதக்கங்கள் கிடைத்தன. பாரா பேட்மிண்டனில் ஒரு தங்கம் இரண்டு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலம் என மொத்தம் ஐந்து பதக்கங்கள் கிடைத்தன. பாரா ஜூடோவில் ஒரு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. பாரா துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் என மொத்தம் நான்கு பதக்கங்கள் கிடைத்தன. பாரா தடகளத்தில் வரலாறு காணாத அளவுக்கு இந்தியா மொத்தம் 17 பதக்கங்களை வென்றது. தடகளத்தில் தங்கம், ஆறு வெள்ளி மற்றும் ஏழு வெண்கலங்களை இந்தியா வென்றது. மொத்தமாக 29 பதக்கங்களை வென்ற இந்தியா 2024 பாராலிம்பிக் பதக்கப் பட்டியலில் 18 ஆவது இடத்தில் உள்ளது.
2024 பாராலிம்பிக் தொடரின் பதக்கப் பட்டியல் விவரம் (முதல் 10 தரவரிசை மற்றும் இந்தியாவின் தரவரிசை விவரம்) –
1. சீனா – 94 தங்கம், 76 வெள்ளி, 50 வெண்கலம் – 220 பதக்கங்கள்
2. கிரேட் பிரிட்டன் – 49 தங்கம், 44 வெள்ளி, 31 வெண்கலம் – 124 பதக்கங்கள்
3. அமெரிக்கா – 36 தங்கம், 42 வெள்ளி, 27 வெண்கலம் – 105 பதக்கங்கள்
4. நெதர்லாந்து – 27 தங்கம், 17 வெள்ளி, 12 வெண்கலம் – 56 பதக்கங்கள்
5. பிரேசில் – 25 தங்கம், 26 வெள்ளி, 38 வெண்கலம் – 89 பதக்கங்கள்
6. இத்தாலி – 24 தங்கம், 15 வெள்ளி, 32 வெண்கலம் – 71 பதக்கங்கள்
7. உக்ரைன் – 22 தங்கம், 28 வெள்ளி, 32 வெண்கலம் – 82 பதக்கங்கள்
8. பிரான்ஸ் – 19 தங்கம், 28 வெள்ளி, 28 வெண்கலம் – 75 பதக்கங்கள்
9. ஆஸ்திரேலியா – 18 தங்கம், 17 வெள்ளி, 28 வெண்கலம் – 63 பதக்கங்கள்
10. ஜப்பான் – 14 தங்கம், 10 வெள்ளி, 17 வெண்கலம் – 41 பதக்கங்கள்
18. இந்தியா – 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் – 29 பதக்கங்கள்
நன்றி mykhel