தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களது வகுப்பறை நிகழ்வுகளில் பாடப்புத்தகம் தாண்டி சில விஷயங்களை கற்று தருமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இது பொது அறிவு சார்ந்ததாக இருக்க வேண்டும். இதையொட்டி நடத்தப்படும் போட்டிகள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் காத்திருக்கிறது.

அரசு பள்ளி மாணவர்களை வெளிநாட்டிற்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவது தமிழகத்தில் பலராலும் வரவேற்கப்பட்டு வருகிறது. இது தேசிய அளவில் முன்மாதிரி திட்டமாகவும் மாறியிருக்கிறது. இதற்கான முன்னெடுப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செய்து வருவது கவனிக்கத்தக்கது. இவ்வாறு வெளிநாடு கல்வி சுற்றுலாவின் பின்னணியில் கல்வி சாரா நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது அவசியமாகிறது.

இதுதொடர்பாக அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். கல்வி சாரா நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்கள் முக்கியத்துவம் தர வேண்டும். வாரந்தோறும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட வேண்டும். இதில் வெற்றி பெறுவோர் வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் அடுத்தடுத்து பங்கேற்பர்.

வெளிநாட்டு கல்வி சுற்றுலா

தமிழக அளவில் வெற்றி பெறுவோர் வெளிநாடு சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்படுவர். இதற்காக 5.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த கல்வியாண்டில் சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் வெளியிட்டுள்ள உத்தரவில், 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் குறைந்தது ஒரு பள்ளி கிளப்பில் சேர்ந்து செயல்பட வேண்டும்.

அரசு பள்ளி மாணவர்கள் கோரிக்கை

அது இலக்கியம், வினாடி வினா, கலை, திரைப்படம் திரையிடல், வானவில் மன்றம் உள்ளிட்டவை ஆகும். இந்த நடவடிக்கைக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. வாரந்தோறும் நடத்தப்படும் கல்வி சாரா செயல்பாடுகள் பெரும்பாலும் மாலை 4 மணிக்கு பிறகே நடத்தப்படுகின்றன. எனவே தூரமாக செல்ல வேண்டிய மாணவ, மாணவிகள் முன்பே சென்று விடுகின்றனர்.

நன்றி samayam

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *