அவர்களின் இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்து, இலங்கை காங்கேசம் துறைமுகம் கொண்டு சென்றதாக கரையில் இருந்த மீனவர்களுக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் கிடைத்தது.
தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற 22 தமிழக மீனவர்கள், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்தது.
மேலும் அவர்களின் இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்து, இலங்கை காங்கேசம் துறைமுகம் கொண்டு சென்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி மகாராஜா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 21ஆம் தேதி 10 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.
இதே போல் தென் டெனிலா என்பவருக்கு சொந்தமான மற்றொரு படகில் 23ஆம் தேதி 12 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இரண்டு விசைப்படகுகளிலும் சென்ற மீனவர்கள் நெடுந்தீவு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக 22 பேரையும் கைது செய்துள்ளனர்.
மேலும் அவர்களின் இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்து, இலங்கை காங்கேசம் துறைமுகம் கொண்டு சென்றதாக கரையில் இருந்த மீனவர்களுக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் கிடைத்தது.
அடுத்தகட்ட நடவடிக்கைக்காக மீனவர்கள் இன்று இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக கடல்சார் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
எங்கள் மீனவர்கள் முறைகேடான மீன்பிடி நடைமுறைகளில் ஈடுபடுவதில்லை. அவர்கள் மன்னார் வளைகுடாவில் இலங்கைக்கு தெற்கே சென்று மீன்பிடிக்க இந்தியப் பெருங்கடலுக்குச் செல்கிறார்கள், என்று தருவைகுளத்தைச் சேர்ந்த மீனவர் தலைவர்களில் ஒருவரான எஸ்.அந்தோனி லாரன்ஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
படகு மற்றும் மீனவர்களின் அடையாளங்களைச் சரிபார்க்கப் போவதாகக் கூறி இந்த படகுகளை அணுகிய இலங்கை கடற்படையினர், பிறகு அத்துமீறி நுழைந்ததற்காக கூறி அவற்றை சிறைபிடித்தனர். எங்களிடம் முழுமையான தகவல்கள் இல்லை, இலங்கையில் இருந்து மேலும் தகவல்களுக்காக காத்திருக்கிறோம், அதன்பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுப்போம், என்று லாரன்ஸ் மேலும் கூறினார்.
இதனிடையே, தமிழக மீனவர் பிரதிநிதிகள் திங்கள்கிழமை டெல்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து தங்களின் துயரங்களுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.