cake

கோவை பாஜக தெற்கு மாவட்ட தலைவராக இருப்பவர் வசந்தராஜன். கடந்த நாடாளுமன்ற தேர்தலில், பொள்ளாச்சி தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். நேற்று முன்தினம் அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.  அப்போது, ‘தமிழ்நாடு அரசு  தலைமைச் செயலகம்’ என்ற வாசகத்துடன் கூடிய சட்டமன்ற வடிவிலான கேக்கை வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில் அது தமிழ்நாடு அரசை அவமதிக்கும் செயல் என திமுகவினர் கொந்தளித்து வருகின்றனர். இதுகுறித்து திமுகவினர் கூறுகையில், “வசந்தராஜன் ஒரு கவுன்சிலர் பதவியில் கூட இல்லை. மாநிலத்தில் பாஜக ஆட்சியும் இல்லை. அவர் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியை குறிவைத்து பணியாற்றி வருகிறார். அதை யாரும் குறை சொல்லவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *