teachers

ஆண்டுதோறும்  செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படும். அந்த வகையில், இந்தாண்டு விருதுக்காக  நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களிடம் இருந்து, ஜூன் மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதிலிருந்து 50 பேர் விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.

அந்தவகையில், தமிழகத்தைச் சேர்ந்த வேலூர் மாவட்டம் ராஜகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கோபிநாத் மற்றும் மதுரை டி.வி.எஸ். மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த முரளிதரன் ஆகியோர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.

செப்டம்பர் 5-ம் தேதி, டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இருந்து விருது பெறுவர். தேசிய நல்லாசிரியர் விருது பெறுபவர்களுக்கு 50,000 ரூபாய், வெள்ளிப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். 

தொடர்ந்து, ஆசிரியர்கள் கோபிநாத் மற்றும் முரளிதரனை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி சமூக வலைதளம் மூலமும், செல்போனில் தொடர்புகொண்டும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த கோபிநாத் மற்றும் முரளிதரன் ஆகிய இரண்டு ஆசிரியர்களுக்கு மத்திய அரசு வழங்கும் தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி indianexpress

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *