அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 39 ரன்கள் சேர்த்த நிலையில், 20 ஓவர்களில் இந்திய அணி, 124 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி வருண் சக்கரவர்த்தியின் சுழலில் தடுமாறியது.
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 போட்டியில் வெற்றி பெற்று, தென் ஆப்பிரிக்க அணி பதிலடி கொடுத்துள்ளது.
முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில், தென் ஆப்பிரிக்காவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடந்த 2-ஆவது போட்டியில், இந்திய வீரர்கள் ஏமாற்றினர். கடந்த போட்டியில் சதமடித்த சஞ்சு சாம்சன் இந்த போட்டியில் ரன் ஏதும் எடுக்காமலேயே ஆட்டமிழந்தார். கேப்டன் சூர்யகுமார், அபிஷேக் ஆகியோர் தலா 4 ரன்களில் வெளியேற, திலக் வர்மா மற்றும் அக்ஷர் படேல் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 39 ரன்கள் சேர்த்த நிலையில், 20 ஓவர்களில் இந்திய அணி, 124 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி வருண் சக்கரவர்த்தியின் சுழலில் தடுமாறியது.
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், 47 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த தென் ஆப்பிரிக்க வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.
19 ஓவர்களில் இலக்கை எட்டிய தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் அபாரமாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி, சர்வதேச டி20 போட்டிகளில் முதல்முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் மூலம், 4 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஒன்றுக்கு ஒன்ற என சமநிலையை அடைந்தது. இந்த தோல்வியால், சர்வதேச டி20 போட்டிகளில் தொடர்ந்து 11 போட்டிகளில் வென்ற இந்திய அணியின் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்தது.
Nandri news18