ஜம்மு காஷ்மீர், கிஷ்த்வாரில் நடந்த என்கவுன்டர் குறித்து, கடந்த மூன்று நாட்களாக குந்த்வாரா மற்றும் அதை ஒட்டியுள்ள கேஷ்வான் காடுகளில் தலைமறைவான தீவிரவாதிகளைத் தேடி அழிக்கும் நடவடிக்கை நடந்து வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் மலைப்பாங்கான கிஷ்த்வார் மாவட்டத்தின் உயரமான பகுதிகளில் உள்ள கேஷ்வானின் அடர்ந்த காடுகளில் ஞாயிற்றுக்கிழமை தீவிரவாதிகளுடன் நடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையில் ராணுவத்தின் சிறப்புப் படையின் ஜூனியர் கமிஷன்ட் ஆபீசர் (ஜே.சி.ஓ) உயிரிழந்தார்; 3 வீரர்கள் காயமடைந்தனர் – அவர்களில் 2 பேர் படுகாயமடைந்தனர்.

இதே தீவிரவாதிகள் வியாழக்கிழமை 2 கிராம பாதுகாப்பு காவலர்களை (வி.டி.ஜி) கடத்திச் சென்று கொன்றனர் என்று நக்ரோடாவை தளமாகக் கொண்ட ஒயிட் நைட் கார்ப்ஸ் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவில் கூறியது. மேலும், ஜே.சி.ஓ-வின் மரணத்தையும்  உறுதிப்படுத்தியது. கொல்லப்பட்ட பாரா 2-ன் கிராம காவலர்களில் நைப் சுபேதார் ராகேஷ் குமார் என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்கிழமை காலை மற்றொரு பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஸ்ரீநகர் அருகே உள்ள ஜபர்வான் வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த துப்பாக்கிச் சண்டையில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

ஒயிட் நைட் கார்ப்ஸ் ஒரு எக்ஸ் பதிவில் கூறியது,  “ஒயிட் நைட் கார்ப்ஸ் மற்றும் அனைத்து அணிகளும் துணிச்சலான இதயத்துடன், பாரா 2-ன் நைப் சுபேதார் ராகேசஷ குமாரின் உயர்ந்த தியாகத்திற்கு வணக்கம் செலுத்துகின்றன. 09 நவம்பர் 2024 அன்று கிஷ்த்வாரில் உள்ள பார்ட் ரிட்ஜின் பொதுப் பகுதியில் தொடங்கப்பட்ட கூட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சப் ராகேஷ் இருந்தார்… இந்த துயரத்தின் போது அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்துடன் நாங்கள் நிற்கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளது.


“நவம்பர் 10, 24 அன்று, அந்த பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் அடிப்படையில், பார்ட் ரிட்ஜ் கிஷ்த்வார் பொதுப் பகுதியில் பாதுகாப்புப் படையினரால் கூட்டு நடவடிக்கை தொடங்கியது. இரண்டு நாட்களுக்கு முன்பு கிஷ்த்வாரில் 02 அப்பாவி கிராமவாசிகளை (VDGs) கடத்திச் சென்று கொன்றது இதே குழுதான். தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டு துப்பாக்கிச் சண்டை தொடங்கியது, ஆபரேஷன் நடந்து வருகிறது” என்று ஒயிட் நைட் கார்ப்ஸ் கூறியுள்ளது.


பாதுகாப்புப் படை பாரா கமாண்டோக்கள் வெள்ளிக்கிழமை கேஷ்வானில் வான்வழியாக தேடத் தொடங்கியதாகவும், அதன் பின்னர் அவர்கள் அடர்ந்த காடுகளில் தீவிரவாதிகளைத் தேடி வருவதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன. ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில், காடுகளில் மறைந்திருந்த தீவிரவாதிகளின் குழு அவர்கள் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியது, ஆரம்பத்தில் துப்பாக்கிச் சண்டையின் போது, ​​4 வீரர்கள் காயமடைந்தனர். அவர்களில், ஜே.சி.ஓ பின்னர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

முன்னதாக, ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதக் குழுவுடன் தொடர்புடைய காஷ்மீர் புலிகள், குந்த்வாராவில் வசிக்கும் குல்தீப் குமார் மற்றும் நசீர் ஆகிய இரு வி.டி.ஜி-களின் கொலைகளுக்கு பொறுப்பேற்றுள்ளனர்.

கடந்த 12 நாட்களில் ஜம்மு பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய மூன்றாவது தாக்குதல் இதுவாகும். அக்டோபர் 29-ம் தேதி, பட்டால் பகுதியில் ராணுவ ஆம்புலன்ஸ் தாக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் 3 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர்.

ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த மற்றொரு துப்பாக்கிச் சண்டையில், ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் ராணுவத்தின் கூட்டுக் குழு ஜபர்வான் காடுகளில் தீவிரவாதிகள் இருப்பதைப் பற்றிய தகவல்களைப் பெற்ற பின்னர் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியது. இந்த தேடுதல் நடவடிக்கையின் போது, ​​அவர்கள் துப்பாக்கிச் சூடு மற்றும் பதிலடி கொடுத்தனர்.

முதற்கட்ட துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு, அப்பகுதியில் அமைதி நிலவியதால், ராணுவம் தேடுதல் வேட்டையை விரிவுபடுத்தியது.

ஜபர்வான் காடுகள் ஸ்ரீநகர் நகருக்கு அருகில் உள்ளன மற்றும் தெற்கு காஷ்மீரில் உள்ள டிரால் மற்றும் பஹல்காமுடன் ஒருபுறமும், கந்தர்பாலில் உள்ள கங்கன் மறுபுறமும் இணைக்கப்பட்டுள்ளன. இப்பகுதி தீவிரவாதிகளின் போக்குவரத்து பாதையாக அறியப்படுகிறது.

சமீப வாரங்களாக பள்ளத்தாக்கில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையேயான என்கவுன்ட்டர்களில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களில், பள்ளத்தாக்கு இதுபோன்ற ஐந்து துப்பாக்கிச் சண்டைகளை கண்டுள்ளது.

சனிக்கிழமையன்று, வடக்கு காஷ்மீரின் சோபோரின் ராம்பூர்-ராஜ்பூர் காடுகளில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான். அதற்கு ஒரு நாள் முன்பு சோபோரின் சாகிபோரா கிராமத்தில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். வெள்ளிக்கிழமையும், பந்திபோரா மற்றும் குப்வாரா ஆகிய இடங்களில் நடந்த இருவேறு துப்பாக்கிச் சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

Nandri  indianexpress

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *