Chennai Science Festival 2024 : தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறையின் அங்கமான அறிவியல் நகரம், பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கிடையே அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் அறிவியல் கருத்துக்களைப் பரப்பி அறிவியல் அறிவினை மேம்படுத்துவதற்காகவும் பல நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. அந்த வகையில் சென்னையில் பிரமாண்டமாக அறிவியல் விழா வரும் செப்டம்பர் 24-ம் தேதி முதல் தொடங்குகிறது. ஐஐடி மெட்ராஸ், அண்ணா பல்கலைக்கழ்கம், சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட அறிவியலில் தலை சிறந்து விளங்கும் நிறுவனங்கள் மூலம் அறிவியல் கண்காட்சி அமைக்கப்படுகிறது. பொது மக்கள் மற்றும் பள்ளி, மாணவர்கள் இந்த கன்காட்சியில் கலந்துகொண்டு பார்வையிடலாம்.

Chennai Science Festival B.M. Birla Planetarium Exhibition 2024 : தமிழக அரசின் உயர்கல்வித் துறையின் அங்கமான அறிவியல் நகரம் மூலம் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் அறிவியல் விழா பெரியார் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மைய (பிர்லா கோளரங்கம்) வளாகத்தில் வரும் செப்டம்பர் 24-ம் தேதி முதல் தொடங்குகிறது.

அறிவியல் நகரம் :

அறிவியல் என்பது எப்போதுமே மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஒரு அசாதாரண விஷயம். தொழில்நுட்பம் முதல் விண்வெளி ஆய்வுகள் முதல் எதிர்கால தலைமுறைகளுக்கு விழிப்புணர்வு கொண்டுவர உலகளவில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழக அரசின் சிறப்பு நிகழ்வாக அறிவியல் விழா நடத்தப்படுகிறது. தமிழக அரசின் உயர்கல்வித் துறையின் அங்கமான அறிவியல் நகரம், பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கிடையே அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் அறிவியல் கருத்துக்களைப் பரப்பி அறிவியல் அறிவினை மேம்படுத்துவதற்காகவும் பல நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது.

சென்னை அறிவியல் விழா 2024 :

இந்நிகழ்ச்சிகளில் மிகமுக்கியமான ஒன்று சென்னை அறிவியல் விழாவாகும். சென்னை அறிவியல் விழா 2008 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசின் ஆதரவுடன் மிக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவினை வெற்றிகரமாக நடத்துவதற்காக முக்கிய உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களான இந்திரா காந்தி அணு ஆற்றல் ஆராய்ச்சி மையம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT Madras), தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், இந்திய மருத்துவ இயக்குநரகம், புற்றுநோய் நிறுவனம் போன்ற அறிவியலில் தலை சிறந்து விளங்கும் நிறுவனங்கள் வருகை புரியும் அனைத்து தரப்பினர்களுக்கும் காட்சி பொருட்களை வைத்து காட்சி கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பிரமாண்ட அறிவியல் கண்காட்சி :

 

சென்னை அறிவியல் விழாவில் பிரமாண்டமான அறிவியல் கண்காட்சி அரங்குகள் மற்றும், அறிவியல் செய்முறை விளக்கங்கள், மற்றும் அறிவியல் லேசர் ஒளி, ஒலி காட்சி ஆகியன இடம் பெறுகின்றன. சென்னை அறிவியல் விழாவினை 24.09.2024 அன்று மாலை 1.30 மணி அளவில் உயர் கல்வித் துறை அமைச்சர் துவக்கி வைக்கவுள்ளார். இவ்விழா 24.09.2024 முதல் 26.09.2024 வரை பெரியார் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மைய (பிர்லா கோளரங்கம்) வளாகத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையாளர்களுக்காக நடைபெறும். அறிவியல் ஆர்வமுள்ள பொது மக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இந்த விழாவில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை பார்வையிடலாம்.

நன்றி samayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *