railway

சென்னை: சென்னை புறநகரில் 3 மின்சார ரயில் சேவை இன்று (செப்.9) முதல் தொடங்கப்படுகிறது. இதுபோல, 5 மின்சார ரயில்கள் நீட்டித்து இயக்கப்படுகின்றன.

சென்னை கடற்கரை- தாம்பரம் – செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் – திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி ஆகிய வழித்தடங்களில் தினசரி 600-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள்இயக்கப்படுகின்றன. இவற்றில் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தினசரி பயணம் செய்கின்றனர்.

பரிசீலித்த ரயில்வே நிர்வாகம்: பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூடுதல் மின்சாரரயில்களை இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை பரிசீலித்த ரயில்வே நிர்வாகம், புதிதாக 3 மின்சார ரயில் சேவையைதொடங்கவும், 5 மின்சார ரயில்களின் சேவையை நீட்டிக்கவும் அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி, சென்னை புறநகரில்3 மின்சார ரயில் சேவை இன்று(செப்.9) முதல் தொடங்கப்படுகிறது. ஆவடி – சென்னை சென்ட்ரலுக்கு காலை 9.50 மணிக்கும், சென்ட்ரல் – திருவள்ளூருக்கு காலை 10.40 மணிக்கும், திருவள்ளூர் – சென்ட்ரலுக்கு மாலை 3.50 மணிக்கும் புதிய மின்சார ரயில் சேவை இன்றுமுதல் தொடங்குகிறது.

சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டிக்கு நண்பகல் 12.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், சூலூர்பேட்டை வரை நீட்டித்து இயக்கப்படும். கூடுவாஞ்சேரி – தாம்பரத்துக்கு இரவு 8.55, 10.10, 10.25, 11.20 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், கடற்கரை வரை நீட்டித்து இயக்கப்படும்.

ரயில்களின் நேரத்தில் மாற்றம்: இதுதவிர, சென்ட்ரல் – அரக்கோணம், கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 28 ரயில்களின் நேரத்தில் 5 நிமிடம் முதல் 30 நிமிடங்கள் வரையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நேர மாற்றம் இன்றுமுதல் அமலுக்கு வருகிறது.

நன்றி hindutamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *