சுயேட்சை எம்.சி.. தலித் மக்களுக்கான போராளி.. யார் இந்த ஆம்ஸ்ட்ராங்? அதிர வைத்த படுகொலை!

கொண்ட மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளார் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங். தலித் தலைவரான ஆம்ஸ்ட்ராங் படுகொலை தமிழகத்தையே அதிர வைத்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங்கின் தந்தை, தீவிர பெரியாரிய மற்றும் திராவிடர் கழக ஆதரவாளர். விளிம்பு நிலை மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தார் ஆம்ஸ்ட்ராங்.

வழக்கறிஞரான ஆம்ஸ்ட்ராங், 2000 ஆம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்று சென்னை மாமன்ற உறுப்பினர் ஆனார் ஆம்ஸ்ட்ராங்.

ஆம்ஸ்ட்ராங் சென்னை மாமன்ற உறுப்பினராக பணியாற்றிய காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு பணிகளைச் செய்தார். குறிப்பாக அவரது தலைமையில் நடந்த போராட்டத்தின் காரணமாக, போதிய பாதுகாப்பு உபகரணம் இன்றி, சரியான ஊதியம், பணியிட பாதுகாப்பு இன்றி பணியாற்றிய சுமார் 2500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அரசு ஊழியர்களாக அங்கீகரிக்கப்பட்டனர்.

2007 ஆம் ஆண்டில், உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011 சட்டப்பேரவை தேர்தலில் பகுஜன் சமாஜ்வாதி கட்சி சார்பில் கொளத்தூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டார். டூ-வீலர்களில் வந்த 6 பேர் கும்பல்.. வீட்டுக்கு முன்பாகவே ஆம்ஸ்ட்ராங் படுகொலை! அலறிய பெரம்பூர்!

சென்னை பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனங்களில் வந்து வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியுள்ளது. கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையை அடுத்த பெரம்பூர் செம்பியம் பகுதியில் சடையப்பன் தெருவில் உள்ள தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்துள்ளார் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங். அவருடன் மேலும் இருவரும் நின்று கொண்டிருந்துள்ளனர்.

இன்று இரவு 7.30 மணியளவில் அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொன்றது. கழுத்து தலை உள்ளிட்ட பகுதிகளில் அந்த 6 பேர் கொண்ட கும்பல் கடுமையாக வெட்டி உள்ளனர்.

மேலும், அருகில் இருந்த 2 பேருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. ரத்த வெள்ளத்தில் ஆம்ஸ்ராங் சரிந்த நிலையில், அந்த கும்பல், தாங்கள் வந்த இருசக்கர வாகனங்களில் அங்கிருந்து தப்பியுள்ளது.

இதனையடுத்து, படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங் உடனடியாக சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். அவரது உடலை உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த படுகொலைச் சம்பவம் குறித்து செம்பியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஆம்ஸ்டாங்க் உடன் இருந்த இரண்டு பேருக்கும் வெட்டு விழுந்த நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முகப்பு
செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. தலையில் அடித்துக்கொண்டு கதறி அழுதபடி மருத்துவமனைக்கு வந்த பா.ரஞ்சித்!ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. தலையில் அடித்துக்கொண்டு கதறி அழுதபடி மருத்துவமனைக்கு வந்த பா.ரஞ்சித்!
இன்று இரவு 7.30 மணியளவில் அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொன்றது. கழுத்து தலை உள்ளிட்ட பகுதிகளில் அந்த 6 பேர் கொண்ட கும்பல் கடுமையாக வெட்டி உள்ளனர்.

சூப்பரான திட்டம்.. அனைத்து கட்சி எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கும் கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!
மேலும், அருகில் இருந்த 2 பேருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. ரத்த வெள்ளத்தில் ஆம்ஸ்ராங் சரிந்த நிலையில், அந்த கும்பல், தாங்கள் வந்த இருசக்கர வாகனங்களில் அங்கிருந்து தப்பியுள்ளது.

இதனையடுத்து, படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங் உடனடியாக சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். அவரது உடலை உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சுயேட்சை எம்.சி.. தலித் மக்களுக்கான போராளி.. யார் இந்த ஆம்ஸ்ட்ராங்? அதிர வைத்த படுகொலை!சுயேட்சை எம்.சி.. தலித் மக்களுக்கான போராளி.. யார் இந்த ஆம்ஸ்ட்ராங்? அதிர வைத்த படுகொலை!
இந்த படுகொலைச் சம்பவம் குறித்து செம்பியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஆம்ஸ்டாங்க் உடன் இருந்த இரண்டு பேருக்கும் வெட்டு விழுந்த நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கலெக்டர் செய்தது தவறு.. மாஞ்சோலை தேயிலை தொழிலாளர்களுக்காக.. அதிரடியாக களம் இறங்கிய கிருஷ்ணசாமி
சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் கொலையாளிகளை வலைவீசித் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தலைநகர் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக உள்ள ஆம்ஸ்ட்ராங் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. சில ரவுடி கும்பல்கள் உடன் இவருக்கு முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தப் படுகொலை சம்பவத்தின் பின்னணியில் ஏதேனும் முன் விரோதம் உள்ளதா? வேறு ஏதேனும் காரணமா? அரசியல் கொலையா என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நன்றி oneindia.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *