‘சாட்டை’ கைதுக்கு காரணமான பாட்டை மீண்டும் பாடிய சீமான்: ‘என் மீது வழக்கு போடுவீர்களா?’ என சவால்
நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், சாட்டை துரைமுருகன் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியைத் தாக்கிப் பாடிய பாடலை நான் பாடுகிறேன் என் மீது வழக்கு போடுவீர்களா என்று சவால் விடுத்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், சாட்டை துரைமுருகன் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியைத் தாக்கிப் பாடிய பாடலை நான் பாடுகிறேன் என் மீது வழக்கு போடுவீர்களா என்று சவால் விடுத்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து பாட்டுப் பாடி அவதூறான கருத்துக்களை பேசியதாகவும், தமிழக அரசை அவதூறாக சித்தரித்து பேசியதாகவும் அவர் மீது தி.மு.கவினர் புகார் அளித்திருந்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்ட காவல்துறை, விக்கிரவாண்டியில் சாட்டை துரைமுருகன் விமர்சனம் செய்து பேசியது குறித்து திருச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்க்குப் பதிவு செய்தனர்.
நெல்லை, குற்றாலம் வீராணம் பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த சாட்டை துரைமுருகனை திருச்சி சைபர் கிரைம் போலீசார் வியாழக்கிழமை (ஜூலை 11) காலை கைது செய்தனர். சாட்டை துரைமுருகன் கைதுக்கு நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
சாட்டை துரைமுருகன் கைது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “அந்த பாடலை எப்போதோ யாரோ எழுதி பாடியது, அந்த பாடலைப் பாடினால், எழுதியவர்களை விட்டுவிட்டு பாடியவர்களை கைது செய்வீர்களா, அந்த பாடலை நான் பாடுகிறேன் என் மீது வழக்கு போடுவீர்களா?” என்று சவால் விடுத்தார். மேலும், முன்னாள் முதல்வர் கருணாநிதியைத் தாக்கிப் பாடப்பட்ட பாடலை சீமான் பாடிக் காட்டினார்.
தொடர்ந்து பேசிய சிமான், “நீ புள்ளபூச்சியை பிடித்து விளையாடுவாய், தேளு, பாம்பு, நட்டுவாக்காலி புடிப்பியா, புலி, சிங்கத்தோடு மோதுவியா, நீங்கள் அதிகாரத்தில் இருப்பதால் உங்கள் அப்பாவுக்கு புனிதர் பட்டம் கட்டப் பார்க்கிறாய், பச்சைத் துரோகி, செய்த துரோகம் மறந்துபோய்விடுமா? இந்த நாட்டின் தீய அரசியலின் தொடக்கம், தீய ஆட்சியின் தொடக்கம் ஐயா கருணாநிதி வந்த பிறகுதான்” என்று தி.மு.க அரசைக் கடுமையாகச் சாடி பேசினார்.


நன்றி IndianExpress

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *