lorry

தென்காசியில் சரக்கு வேன் கவிழ்ந்த விபத்தில் 3 பெண்கள் பலியான விபத்தை தொடர்ந்து லோடு வாகனங்களில் மக்களை ஏற்றினால் கடும் நடவடிக்கை என காவல்துறை எச்சரித்துள்ளது.

1999ல் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வாழை லோடு வாகனத்தில் தொழிலாளர்களை ஏற்றி சென்றபோது வாகனம் கவிழ்ந்த விபத்தில் 19 பேர் பலியானார்கள். இதுகுறித்து மாரி செல்வராஜ் இயக்கிய ‘வாழை’ திரைப்படத்தில் பேசப்பட்டிருந்தது. தற்போது அப்படியான சம்பவம் ஒன்று தென்காசியில் நடந்துள்ளது.

தென்காசியில் சரக்கு ஏற்றும் வேனில் தொழிலாளர்களை அழைத்துச் சென்ற நிலையில் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 3 பெண் தொழிலாளர்கள் பரிதாபமாக பலியானார்கள். இதைத் தொடர்ந்து சரக்கு வாகனங்களில் மக்களை ஏற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை சரக டிஐஜி மூர்த்தி எச்சரித்துள்ளார்.

மேலும் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாக்குமரி உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்தவும், மக்களை ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழகம் முழுவதுமே சரக்கு வாகனங்களில் மக்களை ஏற்றிச் செல்வது தொடர்கதையாக உள்ளதாகவும், இதற்கு தமிழக அரசு சரியான நடவடிக்கையை மாநில அளவில் மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழத் தொடங்கியுள்ளது.

நன்றி webdunia

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *