2023-ம் ஆண்டு இதே நாளில் இந்தியாவின் சந்திரயான்-3 நிலவின் தென்துருவத்தில் முதல் நாடாக தரையிறங்கியது.  தென் துருவப் பகுதிக்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. தொடர்ந்து நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய 4-வது நாடு என்ற பெருமையை பெற்றது. 

இந்த குறிப்பிடத்தக்க சாதனையுடன், விண்வெளி ஆய்வில் இந்தியாவின் வளர்ந்து வரும் திறமையை நினைவுகூரும் வகையில், ஆகஸ்ட் 23 தேசிய விண்வெளி தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கிய இடம் சிவசக்தி புள்ளி என்று அறிவிக்கப்பட்டது. 

தொடர்ந்து, இன்று இந்தியாவின் முதல் தேசிய விண்வெளி தினம் இன்று தொடங்கி ஆண்டுதோறும் கொண்டாடப்பட உள்ளது. 

இந்தியாவின் முதல் தேசிய விண்வெளி தினம் இன்று தொடங்கி கொண்டாடப்படுகிறது.

சந்திரயான்-3 கடந்தாண்டு இதே நாளில் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி வரலாறு படைத்தது. இதைக் குறிக்கும் வகையில் இந்தியாவின் முதல் தேசிய விண்வெளி தினம் இன்று (ஆக.23) கொண்டாடப்படுகிறது. 

 நன்றி  indianexpress

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *