டெல்லி: திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் அரசியல் சாசனப் புத்தகத்துடன் தமிழில் உறுதி மொழியேற்றார். மேலும், தலித்- ஆதிவாசிகள்-சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை நிறுத்தக என்றும் அவர் முழக்கமிட்டார்.

நமது நாட்டில் லோக்சபா தேர்தல் சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. இதில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், என்டிஏ கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சியை அமைத்தது. இதையடுத்து நாடாளுமன்றம் முதல்முறையாக நேற்றைய தினம் கூடியது. நேற்றைய தினம் லோக்சபாவில் பல கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் பதவியேற்றனர். இரண்டாவது நாளான இன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்பிக்கள் பதவியேற்றனர்.

தமிழகத்தின் 39 எம்பிக்களும் லோக்சபாவில் இன்று பதவியேற்க உள்ளனர். தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்களே வெற்றி பெற்றனர். அவர்கள் அனைவரும் இன்று பதவியேற்றனர். 8 முறை வெற்றி, அவையின் மூத்த எம்பி! சபாநாயகர் தேர்தலில் காங். சார்பில் இறங்கும் கே சுரேஷ்! யார் இவர் திருவள்ளூர் தொகுதி எம்பி சசிகாந்த் செந்தில் (காங்கிரஸ்) அரசியல் சாசனப் புத்தகத்துடன் தமிழில் உறுதி மொழியேற்றார்.

அவர் அரசியல் சாசனப் புத்தகத்துடன் பதவியேற்க வந்த போதே ஆளும் பாஜக எம்பிக்கள் கோஷமிட்டனர். தொடர்ந்து தமிழில் உறுதிமொழி ஏற்று பதவியேற்ற அவர், “வாழிய வையகம்-! வாழ்க தமிழ்! தலித்- ஆதிவாசிகள்-சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை நிறுத்துக” என முழக்கமிட்டுப் பதவியேற்றார். பதவிப் பிரமாண வாசகங்களைத் தவிர எம்பிக்கள் எழுப்பும் முழக்கங்கள் சபைக் குறிப்பில் இடம் பெறாது எனத் தற்காலிக சபாநாயகர் தெரிவித்தார்.

இருப்பினும் எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *