கல்கி 2898 ஏடி – 7 நாட்களில் 777+ கோடிகள் வசூல், தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுமா?
கல்கி 2898 ஏடி – 7 நாட்களில் 777+ கோடிகள் வசூல், தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுமா? – முழு விவரங்கள் இதோ. பிரபாஸ் நடித்துள்ள கல்கி திரைப்படத்தின் முதல் வார வசூல் பட்டியல் இங்கு விரிவாக உள்ளது. முதல் நாள் வசூலில் இருந்து 7வது நாள் வசூல் வரை முழு விவரங்கள் இந்த பட்டியலில் உள்ளன. மொத்தம் 7 நாட்களில் இப்படம் 777 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளது. முழு லிஸ்ட் இதோ.
கல்கி 2898 ஏடி
கல்கி 2898 AD – இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல் ஹாசன், தீபிகா படுகோன் என இந்திய சினிமா நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் அதிரடி – திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் அஸ்வனி தட் தனது வியஜயந்தி மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
அதிரடி – திரில்லர் திரைக்கதையில் ஒரு சாகசங்கள் நிறைந்த படமாக உருவாகியுள்ள கல்கி படத்திற்கு படத்தொகுப்பாளர் கோட்டகிரி வெங்கடேஸ்வரா ராவ் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனங்களான AA பிலிம்ஸ் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து விநியோகம் செய்துள்ளது.
600 கோடி பொருட்செலவில் உருவாகியுள்ள கல்கி 2898 AD திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ள நிலையில், இப்படம் 2024 ஜூன் 27ல் உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம், கன்னட, மலையாளம் என பல மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.
கல்கி 2898 ஏடி –
கதை கல்கி 2898 AD திரைப்படத்தின் கதை மஹாபாரதம் போரில் தொடங்குகிறது. குருச்சேத்திர போர் முடிவில் கிருஷ்ணனிடம் சாகாவரம் மற்றும் சாபத்தை பெற்ற அஸ்வத்தாமன் கலியுகம் முழுவதும் வாழ்ந்து கிருஷ்ணனின் 10வது அவதாரத்திற்காக காத்திருக்கிறார்.
2898 ஆண்டுகளில் இந்தியாவில் எஞ்சிய நகரமான காசியில் கமல் ஹாசன் (யாஸ்கின்) என்று தன்னை கடவுளாக சித்தரித்து வாழ்ந்து வருகிறார். இவர் ஒரு முக்கோண பிரிமைட்-யை தலைகீழாக வைத்து இயற்கையை மறைத்து வைத்துள்ளார். மன்னர் கால ஆட்சி போல மனிதர்கள் வாழும் நிலையில், மனிதர்கள் காசிற்கு பதில் யூனிட் போன்ற மின்சார சார்ந்த அறிவியலை பயன்படுத்தி வருகின்றனர்.
ஒரு பவுண்டி வீரராக இருக்கும் பிரபாஸ், காம்ப்ளெக்ஸ் என்னும் இடத்திற்கு போக விரும்புகிறார். இதற்காக கடினமாக உழைத்து வரும் இவர், பல சண்டைகள் மற்றும் திருட்டு என பல விஷயங்கள் செய்து வாழ்ந்து வருகிறார்.
நடிகர் தீபிகா படுகோன் காம்ப்ளெக்ஸ் இடத்தில் இருந்து தப்பி வருகிறார். 5 மாத குழந்தையை சுமக்கும் இவர், அங்கிருந்து தப்பித்த இவரை காப்பாற்றி நடிகர் பசுபதி சம்பா என்ற இடத்திற்கு அழைத்து வருகிறார். இடையில் தீபிகா படுகோன்யை பிடித்து கொடுத்தால் காம்ப்ளெக்ஸ் இடத்திற்கு செல்ல முடியும் என நினைத்து பிரபாஸ் அவரை பிடிக்கும் முயற்சியில் துரத்துகிறார்.
குருச்சேத்திர போர் முடிவில்கங்கை நதி முற்றிலுமாக வத்தி போனதும், உனது ரத்னம் கல் ஜொலிக்கும் என கிருஷ்ணன் அஸ்வத்தமானமிடம் சொன்ன வார்த்தைகள் உண்மையானதும், அஸ்வத்தாமன் கல்கி அவதாரம் வரப்போகிறது என உணர்கிறார். இதற்காக தீபிகா படுகோன்யை காப்பாற்றும் முயற்சியில் இறங்குகிறார், அஸ்வத்தாமன்.
அஸ்வத்தாமன் உடன் மோதி தோற்கடிக்க படும் பிரபாஸ், அஸ்வத்தாமன் சென்ற இடத்திற்கு ஒருவரை ஏமாற்றி சூழ்ச்சி செய்து போகிறார். பின் அங்கு மீண்டும் யுத்தம் தொடங்குகிறது. தீபிகா படுகோன்யை காப்பற்ற அஸ்வத்தாமன் முயற்சித்தும், எதிரிகள் தீபிகாவை கடத்துகின்றனர். அஸ்வத்தாமன் கையில் இருக்கும் கோல் விஜய தனுஷ் ஆகும்.
விஜய தனுஷை தொட்டதும் பிரபாஸ் மஹாபாரத கர்ணனாக மாறுகிறார். பின் பிரபாஸ் அங்கிருந்து தீபிகாவுடன் தப்பி செல்கிறார். இதற்கிடையில் இப்படத்தின் வில்லனான கமல் ஹாசன் மீண்டும் பலம் உடையவராக எழுந்து தீபிகாவை அழித்து கிருஷ்ணனின் கல்கி அவதாரத்தை தடுத்து நிறுத்த முயற்சிக்கிறார். பின் என்ன நடக்கிறது என்பதுடன் கல்கி முதல் பாகம் முடிவுக்கு வந்துள்ளது.
கல்கி 2898 ஏடி – விமர்சனம் & ரேட்டிங்
கல்கி 2898 ஏடி திரைப்படம் பிரமாண்ட படமாக உருவாகி தெலுங்கு மற்றும் இந்திய அளவில் பெரிய அளவில் ப்ரொமோட் செய்து ரசிகர்கள் கவனத்தை கவர்ந்துள்ளனர். இப்படத்திற்கு ரிலீஸிற்கு முன் இருந்த எதிர்பார்ப்பை இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பூர்த்தி செய்துள்ளது. பிரமாண்டம் மற்றும் கதைக்களம் என வெரைட்டி காட்டி உள்ள இப்படம், தமிழ் மற்றும் இந்திய ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படுகிறது. இப்படம் சராசரியாக (4/5) ரேட்டிங் பெற்றுள்ளது.
மேலும் படிக்க…
முதல் நாள் வசூல் சாதனை
கல்கி 2898 ஏடி வெளியான முதல் நாளில் பல ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு சமூக வலைத்தளத்தில் பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு மற்றும் விமர்சனம் ரசிகர்களால் வரவேற்கப்பட்ட நிலையில் முதல் நாளில் மட்டும் கல்கி திரைப்படம் 191.5 கோடிகள் வசூலித்துள்ளது.
வார இறுதியில் 500+ கோடிகள்
கல்கி திரைப்படம் 27 ஜூன் (வியாழக்கிழமை) திரையரங்கில் வெளியானது. முதல் நாளில் 191.5 கோடிகள் வசூலித்த கல்கி, பின் வரும் மூன்று நாட்களில் 100 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளது. வியாழன் முதல் ஞாயிறு வரையிலான 4 நாட்களில் மொத்தம் 555+ கோடிகள் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. ரிலீசான வார இறுதியில் இப்படம் 500 கோடிகள் வசூலை தாண்டி பிரமாண்ட வெற்றியை படைத்துள்ளது.
முதல் வார வசூல்
முதல் வார முடிவில் கல்கி திரைப்படம் 777+ கோடிகள் வசூலித்துள்ளது என படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் போஸ்டர் வெளியிட்டுள்ளது. உலகளவில் இப்படம் வெளியாகி அணைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது, மேலும் இப்படம் விமர்சனம் மற்றும் வசூல் என ரசிகர்களின் மத்தியில் கொண்டாடப்பட்டு இமாலய சாதனை படைத்துள்ளது. இப்படம் விரைவில் 1000 கோடிகளுக்கு மேல் வசூலித்து இந்த ஆண்டின் மிக பெரிய வெற்றி படமாக அமைய உள்ளது
கல்கி 2898 ஏடி – தமிழக வசூல்
தமிழகத்தில் மட்டும் கல்கி 2898 ஏடி திரைப்படம் முதல் வார முடிவில் 30 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. டப்பிங் படமாக இப்படம் வெளியாகி பல ரசிகர்கள் கவனத்தை கவர்ந்த கல்கி, தமிழகத்தில் 30 கோடிகளுக்கு மேல் வசூலித்து, பிற மாநிலங்களில் 50, 100 கோடிகள் என வசூல் செய்து வருகிறது.