இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் இந்த ஆண்டு மே மாதம் 30-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை 45 மணிநேரம் தியானம் செய்தார்.
அது நாடாளுமன்றத் தேர்தல் கடைசி கட்டத்தில் இருந்த நாட்கள்.
கன்னியாகுமரியில் பிரதமர் மோதி செலவிட்ட 45 மணி நேரம் அரசுப் பதிவேடுகளில் எப்படிப் பதிவாகியுள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள பிபிசி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பிரதமர் அலுவலகத்திடம் கேட்டிருந்தது.
இந்த விண்ணப்பத்திற்குப் பதில் அளித்துள்ள பிரதமர் அலுவலகம், பிரதமர் மோதி விடுப்பு எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.
மேலும், “பிரதமர் எப்போதும் பணியில் இருக்கிறார்,” என்றும் அந்தப் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டு மே மாதம் பிரதமர் மோதி பொறுப்பேற்றதில் இருந்து ஒரு நாள் கூட விடுப்பு எடுக்கவில்லை என அவரது அலுவலகம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது.
நரேந்திர மோதிக்கு முன் இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் சிலர் தங்கள் பதவிக்காலத்தில் விடுப்பு எடுத்திருந்த தகவலையும் அவர்கள் வெளியிட்டனர்.
இந்தப் பட்டியலில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, மற்றும் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோர் அடங்குவர்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் படி, முன்னாள் பிரதமர்களின் விடுமுறைகள் குறித்த தகவல்கள் பிரதமர் அலுவலகத்திடம் இல்லை.
நன்றி BBC