உக்ரைன் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் ரஷ்ய அணுசக்தி பாதுகாப்பு படை தலைவர் இகோர் கிரில்லோ கொல்லப்பட்டார். இந்த தாக்குதலுக்கு உக்ரைன் பொறுப்பேற்று கொண்டது.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே 1000 நாட்களை தாண்டி போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் இதுவரை பல லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனா். எனினும் இந்த போர் முடிவுக்கு வந்த பாடில்லை. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.

அதே போல் ரஷ்யாவுக்கு வடகொரியா போன்ற நாடுகளும் ஆயுதங்களை வழங்கி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றன. இந்த போரில் சக்தி வாய்ந்த பல ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன. இதனால் 3ம் உலக போருக்கு ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் வழிவகை செய்யும் என பலரும் அச்சம் அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரஷ்யாவின் அணுசக்தி பாதுகாப்பு படைத்தலைவர் இகோர் கிரில்லோவ் குண்டுவெடிப்பு சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு உக்ரைன் பொறுப்பேற்று உள்ளது.

உக்ரைன் மீது ரசாயன தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இந்த படுகொலை சம்பவம் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கோபத்தில் உச்சத்திற்கு சென்றுள்ளார். எனவே விரைவில் உக்ரைன் மீது தீவிர தாக்குதல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன.

அமெரிக்காவின் அடுத்த அதிபர்

ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ஏற்பாடு செய்ய உள்ளதாக அமெரிக்காவின் அடுத்த அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்ப் கூறி உள்ளார். ஆனால் அதற்குள் உக்ரைன் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. உக்ரைனின் இந்த தாக்குதலுக்கு ரஷ்யா தக்க பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது உக்ரைன் தாக்குதலுக்கு பலியான ரஷ்ய தலைவரை பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்த்துள்ளனா். இதற்கு காரணம் ஆபத்தான ரசாயன வெடிமருந்து மற்றும் ஆயுதங்களை அவர் தயாரித்தது என கூறப்படுகிறது. உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் எப்போது முடிவுக்கு வரும் என பலரும் ஆவலாக எதிர்பார்க்கின்றனா்.
Nandri samayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *