ஓய்வை அறிவித்த ஷிகர் தவன், செப்டம்பரில் இந்த தொடரில் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர ஓபனராக இருந்த ஷிகர் தவன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும், உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வுபெறுவதாக சமீபத்தில் அறிவித்தார். ஐபிஎலில் தொடர்ந்து விளையாடுவேன் என்பதை அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.
டெல்லியை சேர்ந்த ஷிகர் தவன், முதல்முறையாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில்தான் அறிமுகமானார். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இப்போட்டியில், அவர் 2 பந்துகளை எதிர்கொண்டு டக்அவுட் ஆனதால், அடுத்து ரெகுலர் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில், உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து அதிரடி காட்டியதால், 2013ஆம் ஆண்டில், மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி தொடர்ந்து அதிரடி காட்ட ஆரம்பித்தார். அந்த வருடத்தில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் டிராபி தொடரில், ஷிகர் தவன்தான், அதிக ரன்களை அடித்த வீரராக இருந்தார். அதன்பிறகு, மூன்றுவிதமான இந்திய அணியிலும் தவனுக்கு வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது.
முதல் டெஸ்ட் போட்டியில், அதிரடியாக 85 பந்துகளில் சதம் விளாசி, அறிமுக டெஸ்டில் அதிவேகமாக சதம் அடித்த இந்தியர் என்ற மெகா சாதனையை படைத்தார். மேலும், சாம்பியன்ஸ் டிராபியில் தொடர்ந்து இரண்டு சீசன்களில் (2013, 2017) ஆகிய ஆண்டுகளில் அதிக ரன்களை அடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையையும் அவர் படைத்துள்ளார். மேலும், 2015ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரில், இந்தியாவுக்காக அதிக ரன்களை அடித்த வீரராக திகழந்தார்.
மொத்தம் 167 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, அதில் 44.11 சராசரியில் 6793 ரன்களை எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 91.35ஆக உள்ளது. அதேபோல், 68 டி20 போட்டிகளில் 27.92 சராசரியில் 1759 ரன்களை எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 126.36ஆக இருந்தது டெஸ்டில்,34 போட்டிகளில் விளையாடி, 40.61 சராசரியில் 7 சதம், 5 அரை சதம் உட்பட 2315 ரன்களை குவித்தார்.
இந்நிலையில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள லெஜண்ட்ஸ் லீக் தொடரில், நான் நிச்சயம் விளையாடுவேன் என ஷிகர் தவன் அறிவித்துள்ளார்.
நன்றி samayam