2024 பரிசு ஒலிம்பிக் தொடரின் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த ஒலிம்பிக் தொடரின் முதல் 10 நாட்களில் சீனா முதலிடத்தில் இருந்தது. அமெரிக்கா குறைவாக தங்கப் பதக்கங்கள் வென்று இருந்ததால் பின்னடைவை சந்தித்து இருந்தது.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களில் அமெரிக்கா அதிக தங்கப் பதக்கங்களை வென்று சீனாவை முந்தி இருக்கிறது. அமெரிக்கா தற்போது முதல் பதக்கப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. அதே சமயம் இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்தியா இதுவரை மூன்று வெண்கலம் மற்றுமே வென்று உள்ளது.
பதக்கப் பட்டியலில் அமெரிக்கா தற்போது 21 தங்கம், 30 வெள்ளி மற்றும் 28 வெண்கலப் பதக்கங்களை வென்று மொத்தம் 79 பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. சீனா 21 தங்கம், 18 வெள்ளி மற்றும் 14 வெண்கலப் பதக்கங்களை வென்று மொத்தம் 53 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த முறை ஒலிம்பிக் தொடரை நடத்தும் ஃபிரான்ஸ் நாடு 13 தங்கம், 16 வெள்ளி மற்றும் 19 வெண்கலப் பதக்கங்களை வென்று மொத்தம் 48 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. பதக்கப் பட்டியலில் ஆஸ்திரேலியா, கிரேட் பிரிட்டன், தென் கொரியா, ஜப்பான், இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் முதல் நான்காவது இடத்தில் இருந்து பத்தாவது இடம் வரை இடம் பெற்று உள்ளன.
இந்தியா இதுவரை மூன்று வெண்கலப் பதக்கங்களை மட்டுமே வென்று பதக்கப் பட்டியலில் 60-வது இடத்தில் உள்ளது. இந்தியாவுக்கு முன் இருக்கும் பல நாடுகள் ஒரு வெள்ளி பதக்கம் வென்றதால் இந்தியாவை முந்தியுள்ளன. எனவே, தற்போது இந்தியா ஒரு வெள்ளி பதக்கம் என்றாலும் இந்த பட்டியலில் 51 வது இடத்துக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது. இந்தியா ஒரு தங்கம் வென்றாலும் 33வது இடத்துக்கு முன்னேறி விடும்.
நன்றி mykhel