டாடா எலாக்ட்ரானிக்ஸ் நிறுவனம் உலகின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் உடன் இணைந்து இந்தியாவில் ஐ-போன் தயாரிக்க இருக்கிறது. இதற்காக சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாயில் முதலீடு செய்துள்ளது டாடா குழுமம். தமிழ்நாட்டில் உள்ள ஓசூரில் தொழிற்சாலை தயாராகி வருகிறது.
இந்த நிலையில் வருகிற நவம்பர் மாதத்தில் இருந்து செல்போன் உற்பத்தி இந்த தொழிற்சாலையில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
உதிரி பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு இங்கு ஐ-போன் உருவாக்கப்படும் (Assembly). இதற்காக 250 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவனம்
உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் 50 ஆயிரம் பேர் வேலைப் பார்க்கும் வகையில் வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் 50 ஆயிரம் பேர் வேலைப் பார்க்கும் வகையில் வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. பெரும்பாலும் பெண்கள்தான் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் ஐ-போன் உற்பத்தியை இந்தியாவில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கியது. பாக்ஸ்கான் நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் ஐ-போன் செல்போன்களை உற்பத்தி (Assembly) செய்கிறது. பாக்ஸ்கான், விஸ்ட்ரான், பெகட்ரான் ஆகிய நிறுவனங்கள் ஐ-போன் தயாரித்து ஏற்றுமதி செய்கிறது. விஸ்ட்ரான் நிறுவனத்தை டாடா குழுமம் 125 மில்லியன் டாலருக்கு கடந்த வருடம் அக்டோபர் மாதம் கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
நன்றி maalaimalar