மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் பொறுப்பேற்றுள்ளார். தாம் விளையாடிய காலத்தில் இந்திய அணிக்காக இரண்டு உலக கோப்பையை வென்று கொடுத்த கம்பீர், இதுவரை 58 சர்வதேச டெஸ்ட், 147 சர்வதேச ஒரு நாள் போட்டிகள் மற்றும் 37 சர்வதேச t20 போட்டிகளில் விளையாடிருக்கிறார்.

இதில் கம்பீர் இரண்டு உலக கோப்பை பைனலில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். இந்த சூழலில் 42 வயதான கம்பீர், தாம் எதிர்கொண்ட வீரர்களில் ஆல் டைம் பெஸ்ட் 11 என்ற ஒரு பட்டியலை வெளியிட்டு இருக்கிறார்.

இதில் மூன்று பாகிஸ்தான் வீரர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள். இது குறித்து பேசி உள்ள கம்பீர் தொடக்க வீரர்களாக ஆஸ்திரேலிய ஜாம்பவான்கள் கில்கிறிஸ்ட் மற்றும் ஹைடனை தேர்வு செய்திருக்கிறார். இதேபோன்று மூன்றாவது வீரராக தென்னாப்பிரிக்காவின் அதிரடி நாயகன் ஏ பி டிவில்லியர்சை தேர்வு செய்துள்ள கம்பீர் நான்காவது வீரராக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாராவின் பெயரை சேர்த்து இருக்கிறார். ஐந்தாவது வீரராக ஆஸ்திரேலியாவை சேர்ந்த அதிரடி வீரர் ஆண்ட்ரூ சைமன்ட்ஸ்க்கு இடம் வழங்கியுள்ள கம்பீர், ஆறாவது வீரராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சாமம் உல் ஹக்கை சேர்த்திருக்கார். ஏழாவது வீரராக இங்கிலாந்து அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ பிளிண்டாப்க்கு இடம் வழங்கியிருக்கிறார். எட்டாவது வீரராக பாகிஸ்தானை சேர்ந்த ஆல் ரவுண்டர் அப்துல் ரசாக்கை தேர்வு செய்துள்ள கம்பீர், 9 ஆவது வீரராக பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தருக்கு இடம் வழங்கியிருக்கிறார்.பத்தாவது வீரராக தென்னாப்பிரிக்காவின் மோர்னே மோர்க்கலை தேர்வு செய்துள்ள கம்பீர் 11 வது வீரராக இலங்கை அணியின் ஜாம்பவான் முரளிதரனுக்கு இடம் வழங்கி இருக்கிறார்.

கம்பீர் தாம் விளையாடிய காலத்தில் பாகிஸ்தான் வீரர் அப்ரிடியுடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார். ஆனால் அவருக்கு தமது அணியில் கம்பீர் இடம் வழங்கவில்லை. தற்போது பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கம்பீர் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்திய அணியை வெற்றி பெற வைத்தால் எனினும் ஒரு நாள் தொடரில் இலங்கைக்கு எதிராக 27 ஆண்டுக்கு பிறகு இந்திய அணி முதல் தொடரை இழந்திருக்கிறது.

நன்றி mykhel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *