எத்தனை வருட ஏக்கம்.. கண்ணீர்.. தமிழக அரசு ஊழியர்களுக்கு விடிவுகாலம் .. வெளியான சூப்பர் அறிவிப்பு
By. Shyamsundar I
Published: Friday, July 5, 2024,
சென்னை: தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களை குஷி படுத்தும் விதமாக.. அவர்களின் வாழ்க்கை எதிர்காலத்தை சரி செய்யும் விதமாக முக்கியமான அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிட உள்ளதாம். இதற்கான இறுதிக்கட்ட ஆலோசனைகள் நடப்பதாக தமிழக அரசு வட்டாரங்கள் நம்மிடம் தெரிவித்துள்ளன.
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களின் பல நாள் கோரிக்கைகளில் ஒன்று காப்பீட்டு முறையை மாற்றுவது. தற்போது இருக்கும் காப்பீட்டை மாற்றி புதிய காப்பீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்பதே தமிழ்நாட்டில் இருக்கும் பல லட்சம் அரசு ஊழியர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
Insurance dearness allowance
PMFBY: ரூ.716 கட்டினால் ரூ.35800 கிடைக்கும்.. பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் இவ்வளவு பலனா?PMFBY: ரூ.716 கட்டினால் ரூ.35800 கிடைக்கும்.. பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் இவ்வளவு பலனா?
இந்த நிலையில்தான் அரசாங்கத்திற்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை சீரமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாம்.
காப்பீட்டு திட்டம்: மாநில அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பலன்கள் அவர்களைச் சார்ந்திருக்கும் பெற்றோருக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாநில அரசு ஊழியர்கள், தங்களைச் சார்ந்திருக்கும் பெற்றோரை புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக சேர்க்க வேண்டும் என்று மாநில அரசிடம் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசு மறுசீரமைக்கும்.
என்ன திட்டம்: இது தொடர்பாக நம்மிடம் பேசிய அரசு தரப்பு நிர்வாகிகள், காப்பீடு மாறப்போகிறது. தனியார் நிறுவனங்களில்தான் ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பலன்கள் அவர்களைச் சார்ந்திருக்கும் பெற்றோர்கள் உள்ளிட்ட நபர்களுக்கும் விரிவுபடுத்தப்படும். ஆனால் பெரும்பாலான அரசு பணிகளில் இன்சூரன்ஸ் என்பது மனைவி, கணவனுக்கு மட்டுமே இருக்கும், குழந்தைகளுக்கு கூடுதல் பிரீமியம் உடன் சேரலாம்.
ஆனால் இப்போது மாநில அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பலன்கள் அவர்களைச் சார்ந்திருக்கும் பெற்றோருக்கும் விரிவுபடுத்தப்படும் திட்டம் உள்ளது. இதற்கான ஆலோசனைகளை செய்து வருகிறோம். பெரும்பாலும் வரும் பிப்ரவரி மாதம் இறுதி செய்யப்பட்டு மார்ச் மாதம் இதற்கான அறிவிப்பு வெளியாகும்.
அடுத்தடுத்த அதிரடி: ஏற்கனவே அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 9% உயர்வு செய்யப்பட்டு உள்ளதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் அகவிலைப்படியை 46% இருந்து 50 % உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நன்றி oneindia.com