fruits-and-vegetables-in-the-food-market

ஆரோக்கியமாக இருக்க, ஆரோக்கியமான உணவு பழக்கம் தேவை என மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆரோக்கியமான பழக வழக்கத்தினால் உடல் தேவையான ஊட்டச்சத்தை எளிதாக பெறும்.

நான் உண்ணும் உணவு மட்டுமல்லாது உணவை சாப்பிடும் விதமும் ஆரோக்கியத்துடன் நேரடி தொடர்பு உள்ளவை. சிறந்த உணவே என்றாலும் தவறான முறையில் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க, காலையில் சரியான உணவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். சில உணவுகளை கட்டாயம் சாப்பிட வேண்டும் என்ற இருக்கும் நிலையில், சில உணவுகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது உடலுக்கு பல ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.

சில உணவுகள், உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் ஊட்டச்சத்துக்களை கொண்டதாக இருந்தாலும், அவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால், ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கும். ஆரோக்கியமாக இருக்க வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

பச்சை வெங்காயம்: வெங்காயத்தில் உள்ள பிரக்டோஸ் ஜீரணிக்க கடினமாக இருப்பதால், வெறும் வயிற்றில் வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் வயிற்றில் வாயு மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

காபி: நம்மில் பலருக்கு காபி குடித்தால் தான், அன்றைய நாள்  நன்றாக தொடங்குவது போன்ற இணர்வு இருக்கும். ஆனால், வெறும் காபி  வெறும் வயிற்றில் காபி குடித்து நாளைத் தொடங்குவது நல்லதல்ல என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். காபியில் உள்ள டானின் நாள் முழுவதும் அமில வீக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் இதனால் நெஞ்செரிச்சல், வாயு பிரச்சனைகள் மற்றும் வயிற்றில் அமில அளவு அதிகரிக்கும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அன்னாசிப்பழம்: அன்னாசிப்பழத்தில் அதிக அளவு ப்ரோமிலைன் உள்ளது. எனவே, காலையில் வெறும் வயிற்றில் அன்னாசிப்பழம் சாப்பிட்டால் வயிற்றில் அமிலத்தின் அளவு அதிகரிக்கும். இது தவிர,  ப்ரோமெலைன் வயிற்று அமிலத்துடன் கலந்து, குடல் சுவர்களை பாதிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *