இந்தியாவில் 18 வயது நிறைவடைந்தவர்கள் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம். இரு சக்கரம், 4 சக்கர வாகனம் ஓட்ட ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்து பெறலாம்.
அந்த வகையில், வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? என்று பார்ப்போம்.
1. மத்திய அரசின் அதிகாரப்பூர்வ பரிவஹன் சேவா என்ற இணையதளத்திற்குச் சென்று, ‘License Related Services’ பகுதிக்குச் சென்று, ‘Drivers/Learners License’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
2. அங்கு வழங்கப்பட்ட பட்டியலில் இருந்து உங்கள் மாநிலத்தைத் தேர்வுசெய்து, Apply for Driving License ஆப்ஷனைக் கிளிக் செய்து, Continue கொடுக்கவும். 3. அடுத்து உங்களைப் பற்றிய விவரங்கள், முகவரி மற்றும் பிற தேவையான தகவல்களை நிரப்பவும்.
3. இப்போது ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
4. அடுத்து அதில் உள்ள டிரைவிங் லைசென்ஸ் டெஸ்ட் ஸ்லாட் தேர்வு செய்யவும். தேதி, நேரத்தை தேர்வு செய்யவும்.
5. நீங்கள் கொடுத்த தேதியில் ஆர்.டி.ஓ அலுவலகம் சென்று லைசென்ஸ் டெஸ்ட் கொடுத்த பின்ஓட்டுநர் உரிமம் பெறலாம்.
நன்றி indianexpress